2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

S&P SL 20 சுட்டியில் மாற்றம்

A.P.Mathan   / 2014 டிசெம்பர் 25 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பங்குச்சந்தையின் செயற்பாட்டுகளை பிரதிபலிக்கும் இரு பிரதான சுட்டிகளில் ஒன்றான S&P SL 20 சுட்டியில் உள்ளடக்கப்பட்டுள்ள கம்பனிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிசெம்பர் 22 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றத்தில், ஏசியன் ஹோட்டல்ஸ் அன்ட் புரொப்பர்டீஸ் பிஎல்சி, சிரி ஹோல்டிங்ஸ் பிஎல்சி மற்றும் ஹேலீஸ் பிஎல்சி போன்றன அகற்றப்பட்டுள்ளன. 

இவற்றுக்கு பதிலாக, அக்சஸ் என்ஜினியரிங், பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி மற்றும் ஸ்ரீ லங்கா ரெலிகொம் போன்றன புதிதாக உள்ளடக்கப்பட்டுள்ளன. 

மொத்த சந்தை மூலதனவாக்க பெறுமதிக்கமைவாக உயர்ந்த மட்டத்தில் காணப்படும் 20 கம்பனிகள் இந்த சுட்டியில் உள்ளடக்கப்பட்டுள்ளன. சர்வதேச ரீதியில் பின்பற்றப்படும் பங்கு மற்றும் நிதி விதிமுறைகளுக்கமைவாக இந்த சுட்டி வடிவமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

S&P SL 20 சுட்டி சகல பங்காளர்கள் மத்தியிலும் அதிகளவு வரவேற்பை பெற்றுள்ளதுடன், கொழும்பு பங்குச்சந்தையை சிறந்த மட்டத்தில் பிரதிபலிப்பதாக கொழும்பு பங்குச்சந்தையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ பண்டாரநாயக்க தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X