2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

SLIITஇன் வணிக முகாமைத்துவம் மற்றும் தகவல் முறைமைகள் மாநாடு

A.P.Mathan   / 2014 ஜூன் 08 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


SLIIT கல்வியகத்தின் வணிகப்பிரிவு மாணவர்களின் ஏற்பாட்டில் அண்மையில் SLIIT மாலபே கம்பஸ் அரங்கத்தில் வணிக முகாமைத்துவம் மற்றும் தகவல் முறைமைகள் மாணவர் மாநாடு இடம்பெற்றது.

தொடர்ந்து 8ஆவது ஆண்டாக முன்னெடுக்கப்பட்ட இந்த மாநாடு, 'Striving for innovation and beyond' எனும் தொனிப்பொருளின் கீழ் வணிக மற்றும் தகவல் முறைமை துறையின் சமகால பிரச்சனைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இந்த மாநாட்டின் குறிக்கோள், SLIIT இளமாணி பட்டதாரிகளுக்கு சந்தை மற்றும் துறை சார்ந்த அறிவை மேம்படுத்திக்கொள்ள உதவுவதுடன், பட்டதாரி கற்கையை வெற்றிகரமாக பூர்த்தி செய்த பின்னர் அவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ள வழிவகுத்தலாகும். மேலும் SLIIT இளமாணி பட்டதாரிகளின் திறமையை வெளிப்படுத்தி அதன் தரம் தொடர்பில் தொழிற்துறையை விழிப்பூட்டுவதே இம்மாநாட்டின் நோக்கமாகும்.

இந்த மாநாட்டின் பிரதம அதிதியாக Laugfs குழுமத்தின் தலைவர் டபிள்யு.எச்.கே.வேகபிட்டய கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார். மேலும் கௌரவ விருந்தினரான ஆர்பிகோ பினான்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜாபிர் கலந்து கொண்டிருந்ததுடன், இலங்கை Young Voices, Leonard Cheshire Disability இன் தலைவர் மொஹமட் இஷான் ஜலீல் கலந்து கொண்டு ஊக்கப்படுத்தும் வகையில் உரை நிகழ்த்தினார்.

HNB இன் கொடுப்பனவு அட்டைகள் மற்றும் இலத்திரனியல் விநியோக வரிசைப் பிரிவு தலைவர் மங்கள பி விக்ரமசிங்க, MIT-பிரதம செயற்பாட்டு அதிகாரி ஹேமந்த ஜயவர்தன, கொக்கா கோலா/இலங்கைக்கான நிதி முகாமையாளர் சம்மிக்க வெதசிங்க, பிரண்டிக்ஸ் இன் உற்பத்தி அபிவிருத்தி முகாமையாளர் திருமதி.சொனாலி குறே மற்றும் வோக்டெக்ஸ் (பிரைவட்)லிமிடெட்டின் பொது முகாமையாளர்(நிதி) திலின ரணசிங்க ஆகியோர் நாகேந்திரகுமார் நாகலிங்கம் அவர்களின் குழு விவாதத்தில் கலந்து கொண்டனர்.

இந்த செயலமர்வில் IT/ தகவல் முறைமை தீர்வுகள் மூலம் எவ்வாறு நிறுவன பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்பது குறித்தும், இந்த தீர்வுகளை பயன்படுத்தி வளர்ச்சியை சாத்தியப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன. MilleniumIT இன் CIO றோஹந்த ரொட்ரிகோ, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங் நிறுவனத்தின் HR-IT பிரிவின் தலைவர் நிரேஷ் சமரநாயக்க, IFS R & D International Ltd இன் மென்பொருள் அபிவிருத்தி பிரிவின் சிரேஷ்ட முகாமையாளர் நுவன் பெரேரா மற்றும் ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் வணிக செயல்பாடு மீள்-பொறியியல் பிரிவின் பிரதி பொது முகாமையாளர் நலீம் ஜயசூரிய ஆகியோர் தொழிற்துறை நிபுணர்களாக டாக்டர்.தீக்ஸன சுரவீர உடன் இணைந்து பங்குபற்றினர்.

இதன் போது 5 பல்கலைக்கழகங்கள் பங்குபற்றிய உள்ளக பல்கலைக்கழக புதிர் போட்டி நடைபெற்றது. இதில் கொழும்பு பல்கலைக்கழகம் முதலிடத்தையும், ICBT இரண்டாமிடத்தையும், ACBT மூன்றாம் இடத்தையும் வென்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .