.jpg)
முன்னணி உயர் கல்விச் சேவைகளை வழங்கி வரும் SLIIT, தனது வணிக முகாமைத்துவம்/ சர்வதேச வணிக முகாமைத்துவத்தில் இளமானிப் பட்டப்படிப்பு கற்கைகளை தொடரும் மாணவர்களின் ஒரு பகுதியினரை தமது இறுதியாண்டு கற்கைகளை கனடாவின் மெமோரியல் பல்கலைக்கழகத்தில் தொடர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருந்ததாக அறிவித்துள்ளது.
நான்கு ஆண்டுகள் வரையிலான பட்டப்படிப்பு என்பது மாணவர்களுக்கு வணிக முகாமைத்துவத்தில் இளமானிப்பட்டத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளதுடன், தற்போது சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு மாறுவதன் மூலம் சர்வதேச அனுபவத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் அமைந்துள்ளது. SLIIT அண்மையில் பல்கலைக்கழகங்களுக்கிடையில் மாணவர்களை மாற்றுவதற்கான புதிய உடன்படிக்கையொன்றில் கனடாவின் மெமோரியல் பல்கலைக்கழகத்துடன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளது.
இந்த முதல் கட்ட மாணவர்களின் மாற்றம் குறித்து அறிவிக்கும் நிகழ்வில் பேராசிரியர் லலித் கமகே, பேராசிரியர் சாம் கருணாரட்ன, பேராசிரியர் மற்றும் கல்வி ஆலோசகர் கலாநிதி. மஹேஷ கபுருபண்டார, கலாநிதி தீக்ஷன சுரவீர, வணிக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் மான் மற்றும் கீர்த்தி ஜயசூரிய ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். இவ்வாறு வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு வெளிநாடுகளில் கல்வி பயிலும் போது தொழில் ஒன்றை மேற்கொள்ளும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் பற்றிய குறிப்புகள் வழங்கப்பட்டிருந்தன.
மெமோரியல் பல்கலைக்கழகம், 4 பல்கலைக்கழக வளாகங்களை கொண்டுள்ளது, இதில் வெவ்வேறு கலாசாரங்களை பின்பற்றும் சுமார் 18500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றமை குறிப்பிடத்தக்கது. கனடாவில் அதிகளவு வெற்றிகரமாக இயங்கும் பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.