2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

SLIITஇன் வணிக பீடம் ஆளுமை திறன் +2014க்காக தயாராகி வருகிறது

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 10 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


SLIITஇன் வணிக பீடத்தின் மூலம் ஆளுமை10 2014 நிகழ்வு தொடர்ச்சியான மூன்றாவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2014 செப்டெம்பர் 26 ஆம் திகதி மாலபே கம்பஸ் வளாகத்தில் அரச, தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளில் தரம் 11 முதல் 13 வரையில் கல்வி பயிலும் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வின் மூலம் பிள்ளைகளின் சிந்தனை, பிரச்சனைகளை தீர்த்தல் மற்றும் தொடர்பாடல் ஆளுமைகளை முன்னேற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
 
இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வில், முதல் பிரிவில் குழுநிலை செயற்பாடும், இரண்டாம் பிரிவில் ஐந்து அறிவுசார் பிரிவுகளை அடிப்படையாக கொண்டு, களிப்பு நிறைந்த வினாத் தொடரும் இடம்பெறவுள்ளன. இவை பொது அறிவு, செய்தி மற்றும் தற்போதைய நிலைவரங்கள், விளையாட்டு, வரலாறு, கலை மற்றும் களியாட்டம் ஆகிய பிரிவுகளை உள்ளடக்கி அமைந்துள்ளன. வெற்றியாளர்களுக்கும் மற்றும் சகல பங்குபற்றுநர்களுக்கும் கவர்ச்சிகரமான அன்பளிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. 
 
ஆளுமை +2014 க்காக தன்னை தயார்ப்படுத்துகின்றமை தொடர்பில் SLIIT இன் வணிக பீடத்தின் பீடாதிபதி கலாநிதி. தீக்ஷன சுரவீர கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையின் வெவ்வேறு பாகங்களைச் சேர்ந்த 75க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு நாம் அழைப்புவிடுத்துள்ளோம். இதிலிருந்து சுமார்  400க்கும் மேற்பட்ட மாணவர்களை நாம் எதிர்பார்க்கிறோம். பாடசாலைகளிலிருந்து எமக்கு கிடைத்திருந்த நேர்த்தியான வரவேற்பு எம்மை மேலும் ஊக்குவித்திருந்தது. வணிக பீடம் மற்றும் எமது அனுசரணையாளர்களுக்கு நான் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
 
SLIITஇன் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பேராசிரியர் லலித் கமகே கருத்து தெரிவிக்கையில், 'SLIITஇன் சமூக பொறுப்புணர்வு செயற்திட்டமாக அமைந்துள்ள இந்த செயற்திட்டம், மாணவர்களின் சிந்தனை, ஆளுமை மற்றும் நேர்த்தியான தொடர்பாடல் திறன் போன்றவற்றை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, போட்டியாளர்கள் மத்தியில் தமக்கு சிறந்ததொரு நிலையை பெற்றுக் கொள்ள ஏதுவான சூழலாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கிறோம்' என்றார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X