2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

VMware Technologiesஐ அறிமுகம் செய்துள்ள பிரான்டிக்ஸ்

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 30 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


உட்கட்டமைப்பு சேவைகளை வழங்குவதில் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற நிறுவனமான VMware, Inc., இன் சேவைகளை பிரான்டிக்ஸ் லங்கா நிறுவியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பிரான்டிக்ஸ் லங்கா தனது வருடாந்த மூலதன மற்றும் செயற்பாட்டு செலவீனங்களை குறைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது. அத்துடன், தகவல் தொழில்நுட்ப சேவைகளை நிறுவும் போது நேரம் மற்றும் பண விரயங்களை குறைத்துக் கொள்ள உதவியாக அமைந்திருக்கும் என எதிர்பார்த்துள்ளது.   
 
இலங்கையில் ஆடைத்தொழிற்துறையில் முன்னோடியாக திகழும் பிரான்டிக்ஸ், சர்வதேச சந்தைகளைச் சேர்ந்த வர்த்தக நாமங்களுக்கான மிகப்பெரும் ஒற்றை ஆடை ஏற்றுமதியாளராக திகழ்கிறது. VMware உடன் நிறுவனசார் சான்றிதழ் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள முதலாவது இலங்கை நிறுவனமாகவும் திகழ்கிறது. இதன் மூலம் நிறுவனத்தின் மாய சூழலை ஒழுங்கமைத்துக் கொள்ள முடிவதுடன், சிக்கனமான கொள்முதல், ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் இலகுபடுத்தப்பட்ட சான்றிதழ் முகாமைத்துவம், ஊழியர்களுக்கான பயிற்சி மற்றும் தொடாச்சியான தொழில்நுட்ப உதவி போன்றன வழங்கப்படும்.
 
இந்த நிறுவனசார் சான்றிதழுக்கு அமைவாக தனது மாய சூழலை கட்டியெழுப்புவதற்காக VMware இன் vSphereTM மற்றும் இடர் மீளமைப்பு செயற்பாடுகளுக்காக vCenterTMSite Recovery Manager™ சேவை போன்ற மேலதிக சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள முன்வந்துள்ளது. இந்த உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கு KBSL Information Technologies Ltd (KBSL) முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தது. 
 
பிரான்டிக்ஸ் குழும தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மனோஜ் பிலிமதலாவ கருத்து தெரிவிக்கையில், 'பிராந்தியத்தைச் சேர்ந்த முன்னணி ஆடை உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் எனும் வகையில், பிரான்டிக்ஸ் தெளிவான நோக்கத்துக்கு அமைவாக செயலாற்றி வருகிறது. இதற்காக வர்த்தக செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு தகவல் தொழில்நுட்பம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நாம் இனங்கண்டுள்ளோம். எமது செயற்பாடுகளை ஒருங்கமைப்பு செய்வதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறோம். இதன் மூலம் தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் செயற்பாடுகள் போன்றன உலகத் தரம் வாய்ந்தனவாக அமைந்துள்ளன' என்றார்.
 
தனது மாய செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு முதற்கட்டமாக VMware உடன் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக பிரான்டிக்ஸ் கைகோர்த்திருந்தது. இந்த காலப்பகுதியில் பிரான்டிக்ஸ் சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்துள்ளது. தனது தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதில் குறிப்பிடத்தக்களவு சரிவை பிரான்டிக்ஸ் எதிர்கொண்டிருந்தது. மாய கட்டமைப்பின் மூலம் வழங்கப்படும் சேவைகள் அதிகளவு தங்கியிருக்கக்கூடியனவாகவும், பல தெரிவுகளை கொண்டனவாகவும் அமைந்துள்ளன. உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவுவதற்கு தேவைப்படும் நேரம் என்பது குறிப்பிடத்தக்களவு குறைவடைந்துள்ளதுடன், மேற்பார்வை செயற்பாடுகளும் அதிகளவு எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.   
 
'எமது வர்த்தக செயற்பாடுகளின் வளர்ச்சிக்கு VMware என்பது தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கும்' என பிலிமதலாவ நம்பிக்கை தெரிவித்திருந்தார். 
 
KBSL நிறுவனத்தின் பிரதம செயற்பாடுகளுக்கான அதிகாரி சில்மி அஹமட் கருத்து கருத்து தெரிவிக்கையில், 'VMware இன் நிறுவனசார் சான்றிதழ் உடன்படிக்கைகள் என்பது நிறுவனங்களுக்கு இலகுவான முறையிலும் சிக்கனமான முறையிலும் தமது மாய சூழல்களின் ஊடாக உயர் பெறுமதியை பெற்றுக் கொள்ள உதவியாக அமையும். இதன் மூலம் நிறுவனங்கள் சிறந்த கட்டமைப்புகளின் மூலம் உயர்ந்த அனுகூலங்களை பெற்றுக் கொள்ள முடியும்' என்றார். 
 
'சர்வதேச ரீதியில் போட்டிகரத்தன்மையை கொண்டுள்ள இலங்கையின் ஆடைத்தொழில் துறை என்பது, பிரான்டிக்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்களிப்பை கொண்டு வேகமாக மாறி வரும் சர்வதேச இயக்கவியலுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை காணப்படுகிறது. இதன் போது செலவீனங்களை குறைக்க வேண்டும் என்பதுடன், வர்த்தக நோக்கங்களையும் எய்த வேண்டிய நிலை காணப்படுகிறது' என VMware இந்தியா மற்றும் சார்க் பிராந்தியத்துக்கான விற்பனை பணிப்பாளர் சங்கீதா கிரி தெரிவித்திருந்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், 'பிரான்டிக்ஸ் உடன் நாம் எமது செயற்பாடுகளை மேலும் விஸ்தரிக்க திட்டமிட்டுள்ளதுடன், வர்த்தக முன்னோக்க செயற்பாடுகளை மேலும் சிறப்பான முறையில் முன்னெடுத்துச் செல்ல உதவவும் திட்டமிட்டுள்ளோம்' என்றார்.
 
இலங்கையைச் சேர்ந்த பெரிய, மத்தியளவு மற்றும் சிறியளவிலான வெவ்வேறு நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்ப சூழலின் வினைத்திறன், அளவீடு மற்றும் agility ஆகியவற்றுக்கு வலுச் சேர்ப்பதில் VMware இன் தொழில்நுட்பங்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X