2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

'Xperience Efficiency' நிகழ்வில் தனது வலு முகாமைத்துவ தீர்வுகளை அறிமுகம் செய்யும் சினெய்டர் இலெக்ரிக

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 24 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


வலு முகாமைத்துவத்தில் உலகப் பிரசித்தி பெற்ற நாமமான சினெய்டர் இலெக்ரிக் நிறுவனம், இன்று (19) ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் தனது தீர்வுகளையும், தொழில்நுட்பங்களையும் வெவ்வேறு பிரிவுகளில் வெளிப்படுத்தியிருந்தது. இந்த நிகழ்வு சினெய்டர் இலெக்ரிக் ஃபிரான்ஸ் நிறுவனத்தின் 'Xperience Efficiency' என்பதற்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வு வலு மற்றும் நிலையாண்மை தொடர்பான பிரச்சினைகளை எவ்வாறு தீர்த்துக் கொள்வது என்பது தொடர்பில் ஒன்றிணைந்து கருத்துப் பகிர்வை மேற்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இதில் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த 400 பிரதான வாடிக்கையாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

'Xperience Efficiency' என்பது சினெய்டர் இலெக்ரிக் மூலம் ஏற்பாடு செய்யப்படும் மாற்றத்தை வலுப்படுத்தும் காரணிகளான, பொருளாதார மற்றும் அரசியல் மறுசமனாக்கல், நகரமயமாக்கல், டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் நிலையான வளங்கள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளன. நவீன ஒன்றிணைக்கப்பட்ட வலு போக்குகள் மற்றும் நிலையாண்மை தீர்வுகள் போன்றவற்றை பார்க்கும் போது, இவை நாம் அனைவரும் செயலாற்றும் விதம், பயிலல் மற்றும் விளையாடல், சிக்கமான எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுப்பது போன்றவற்றை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. தீர்வுகளின் மூலமாக வலு முகாமைத்துவம், வலுவுக்கான வாய்ப்பு மற்றும் வர்த்தக செயற்பாடுகள் செயற்திறன் விடைகள் போன்றவற்றை வீடுகள், அலுவலகங்கள், தொடரமைப்புகள் அல்லது நகரங்கள் போன்ற வலுத் தொடர் பகுதிகளில் வழங்கும் வகையில் அமைந்துள்ளது.
 
இன்றைய நிகழ்வில் சினெய்டர் இலெக்ரிக் நிறுவனத்தின் நிபுணர்கள் வலுப் பிரச்சினைகள், தொழிற்துறைசார் போக்குகள் மற்றும் கண்டுபிடிப்புகளுடனான தீர்வுகள் ஆகியன தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன. கட்டமைப்பு தீர்வுகள் மற்றும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் நவீன அபிவிருத்திகளை குறிக்கும் சந்தைப்பகுதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. உதாரணமாக, வலு, ஆயுள் இடைவெளி, கட்டிடங்கள், தொழிற்துறை, வலு மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியன வெளிப்படுத்தப்பட்டிருந்தன. ஸ்மார்ட்கியர் மொடல் என்பது அதிகளவு கவனத்தை ஈர்த்திருந்தது. ஸ்மார்ட்லிங்க் தொடர்பாடல் கட்டமைப்புடனான Acti 9 மூலம் ஒற்றை அழுதத்தில், இலகுவான வயரிங் செயற்பாட்டை மேற்கொள்ளக்கூடிய வகையிலும் அமைந்திருப்பதுடன், தவறுகள் இல்லாத தொடர்பாடல்களை வாடிக்கையாளர்களின் விநியோக பெனல்கள் மற்றும் எந்தவொரு முகாமைத்துவ கட்டமைப்பு வசதிக்கும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

சினெய்டர் இலெக்ரிக் SAS இலங்கையில், சினெய்டர் இலெக்ரிக் லங்கா (பிரைவேற்) லிமிடெட் எனும் நாமத்தில் இயங்கி வருகிறது. இது  முழுமையான அங்கத்துவ நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் வலையமைப்பைச் சேர்ந்த பங்காளர்கள் வாடிக்கையாளர்களின் சகல தேவைகளையும் துரிதமாக நிவர்த்தி செய்யும் வகையில், ஒருவரை ஒருவர் துரிதமாக கதியில் தொடர்பை மேற்கொண்டு, சினெய்டர் இலெக்ரிக்கின் சகல பொருட் தெரிவையும் வழங்கும் வகையில் அமைந்துள்ளது.
 
சினெய்டர் இலெக்ரிக் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் அனில் சௌத்ரி கருத்து தெரிவிக்கையில், 'கொழும்பில் நாம் ஏற்பாடு செய்துள்ள Xperience Efficiency நிகழ்வின் நோக்கம், இலங்கையைச் சேர்ந்த எமது வாடிக்கையாளர்களுக்கு அறிவை வழங்கும் வகையில் அமைந்திருப்பதுடன், எமது புதிய தீர்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. கொழும்பில் இன்று நாம் எமது பல தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளோம். அனைத்து தரப்பினரையும் இந்த தயாரிப்புகளை பார்வையிட்டு அனுகூலமடையுமாறு நாம் அழைத்திருந்தோம்' என்றார்.

சினெய்டர் இலெக்ரிக் நிறுவனத்தின் இலங்கை, மாலைதீவுகள் மற்றும் பங்களாதேஷ் நாடுகளின் தலைவர் பிரதீப் சைகியா கருத்து தெரிவிக்கையில், 'சினெய்டர் இலெக்ரிக் நிறுவனத்தை பொறுத்தமட்டில் இலங்கை என்பது எப்போதும் பிரதான சந்தையாக அமைந்துள்ளது. இந்த பிராந்தியத்தில் நாம் 2001ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறோம். இதில் வலு முகாமைத்துவம் தொடர்பில் எமது சிறப்புத்தேர்ச்சியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறோம். இலங்கையில் மொத்த வலுத் தேவை என்பது வேகமாக அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது. இந்த தேவைகளை நிவர்த்தி செய்ய, உடனடியாக மாற்று தீர்வுகளை காண வேண்டியுள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வாக சினெய்டர் இலெக்ரிக் மூலமாக வலுச்சிக்கனமான தயாரிப்புகள் சந்தைப்படுத்தப்படுகின்றன. இவற்றின் மூலம் வலு சிக்கனப்படுத்தப்படுகிறது. எமது முகாமைத்துவ தீர்வுகளின் மூலம் வெவ்வேறு துறைகளில் எம்மால் 30 வீதம் வரையிலான வலுவை சிக்கனப்படுத்த முடியும். இந்தப் பிராந்தியத்திலிருந்து எமது தீர்வுகளுக்கு சிறந்த கேள்விகள் காணப்படுவதை நாம் கண்டுள்ளோம். சினெய்டர் இலெக்ரிக் நிறுவனத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் நாம் உறுதியாக உள்ளோம்' என்றார்.

சினெய்டர் இலெக்ரிக் லங்கா என்பது, 20க்கும் அதிகமான உள்நாட்டு அங்கத்தவர்களை கொண்ட தீர்வுகளை வழங்கும் ஒரே நிறுவனமாகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கட்டிடங்கள் (வர்த்தக மற்றும் வதிவிட), உட்கட்டமைப்பு, தொழிற்துறை மற்றும் தரவு நிலையங்கள்/ வலையமைப்புகள் போன்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செயற்திட்டங்களுக்கு தீர்வுகளை வழங்கி வருகிறது. இலங்கையின் பிரபல்யமான வர்த்தக நிறுவனங்களுடன் சினெய்டர் இலெக்ரிக் பங்காண்மைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் இலங்கையர்களுக்கு நவீன தீர்வுகள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்க தன்னை அர்ப்பணித்துள்ளது. கொழும்பை மையமாக கொண்டு இயங்கும் தொழில்நுட்ப அணியை இந்நிறுவனம் கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .