2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ஃபெஷன் பக் முன்னெடுத்திருந்த சமூக பொறுப்புணர்வு திட்டம்

Gavitha   / 2016 செப்டெம்பர் 18 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கல்விச் சூழலை உருவாக்கும் நோக்கில், கந்தளாய் பிரதேசத்தில் உள்ள அல்-தாரிக் கனிஷ்ட பாடசாலையில், ஒரு புதிய வகுப்புக்கான கட்டடம் அமைக்கும் பணியில், “ஃபெஷன் பக்” ஈடுபட்டது.  

நிறுவனத்தின் தொடர்சியான சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்ட இந்த வேலைத்திட்டமானது, முழுமையாகப் பூர்திசெய்யப்பட் ஃபெஷன் பக் நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அந்நிறுவனத்தின் உதவிச் சந்தைப்படுத்தல் முகாமையாளர் எஸ்.எம்.பஹாம், சிரேஷ்ட முகாமையாளர் ரியாஸ் சஹாப்டீன் மற்றும் சந்தைப்படுத்தல் நிறைவேற்று அதிகாரி ஒசத எரங்கொட ஆகியோரால், பாடசாலை அதிபரான ஏ.பி.ஏ.ஜவாஹிருக்கு கையளிக்கப்பட்டது.   

எந்தவொரு பாடசாலையிலும் கல்வி கற்கத் தேவையான சூழல் அமைந்திருப்பது மிக முக்கியமானதொன்றாகும். கிராமப்புற பாடசாலைகள், துரதிர்ஷ்டவசம் காரணமாக பல சமயங்களில் புறக்கணிக்கப்பட்டு விடுகின்றன. தனியார் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள், சிறிய அளவிலேனும் இவ்வாறான நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்ள முடியும் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றது.

“குழந்தைகளின் வாழ்வின் அவசியங்களை உணரும் பொறுப்பு எமக்கு உண்டு. மேலும், இவ்வாறான நடவடிக்கைகளை, எதிர்காலத்தில் நாம் தொடர்ந்து முன்னெடுக்க எதிர்நோக்குகின்றோம்” என பெஃஷன் பக்கின் இயக்குநர் சபிர் சுபியன் தெரிவித்தார்.   

“ஆண்டுதோறும் 20 மில்லியன் ரூபாய்க்கும் மேலான தொகையை, நாடு முழுவதிலும் செயற்படுத்தப்படும் கல்வி, விளையாட்டு மற்றும் சமூக பொறுப்புணர்வுமிக்க பொது நடவடிக்கைகளுக்காக ஃபெஷன் பக், செலவு செய்து வருகின்றது. அண்மையில், நாடு முழுவதிலும் தொழில் வழிகாட்டல் திட்டங்கள் நடத்தப்பட்டதுடன், அஞ்சல் அலுவலகங்கள், மருத்துவமனைகள், பாடசாலைகள் போன்ற பல்வேறு பொது இடங்களைப் புதுப்பித்தல் போன்ற நடவடிக்கைகளும், மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டும் கௌரவிக்கப்பட்டது” என்று கலாநிதி எஸ்.எச்.எம்.பராஸ் தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X