2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

அக்கரைப்பற்றில் DFCC வங்கிக் கிளை திறப்பு

Editorial   / 2022 மார்ச் 25 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.சுகிர்தகுமார் 

அக்கரைப்பற்று அம்பாரை வீதியில் DFCC வங்கியின் கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் நலன்கருதி விசாலமான புதிய கட்டடத்தொகுதியில் வாகனத்தரிப்பிட வசதியுடன் இக்கிளை திறந்து வைக்கப்பட்டது.

வங்கியின் முகாமையாளர் த.லக்ஸ்மன் தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழாவில் பிராந்திய முகாமையாளர் கந்தையா ஜெகராஜா பிரதம அதிதியாக கலந்து கொண்டு கிளையினை திறந்து வைத்தார்.

நிகழ்வில் வங்கி உதவி முகாமையாளர் பி.வரகுணன் உள்ளிட்ட வங்கி உத்தியோகத்தர்கள் வாடிக்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது சிறுவர் சேமிப்பில் ஈடுபட்ட இரு பாடசாலை மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் லீசிங் மூலம் வாகனத்தை பெற்றுக்கொண்ட ஒருவருக்கும் வாகனத்தின் திறப்பு கையளிக்கப்பட்டது. தொடர்ந்து புதிய கடன் அட்டை பெற்றவருக்கான கடன் அட்டை வழங்கப்பட்டதுடன் வங்கியின் சேமிப்பு திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேலும் சுயதொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கும் குறித்த வங்கியின் மூலம் இலகுவான முறையில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .