Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 20 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்நாட்டிலிருந்து பெறப்பட்ட பசுமையான பாலிலிருந்து, அங்கர் திரவ யோகட் (Anchor Drinking Yoghurt) தயாரிப்பை ஃபொன்டெரா பிரான்ட்ஸ் லங்கா அறிமுகம் செய்துள்ளது. ரூ. 309 மில்லியன் முதலீட்டுடன், தன்னியக்க போத்தல் அடைப்பு இயந்திரத்தின் உதவியுடன் இந்தத் தயாரிப்புச் செய்பாடுகளை நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
ஃபொன்டெரா பிரான்ட்ஸ் ஸ்ரீ லங்காவின் முகாமைத்துவ பணிப்பாளர் சுனில் சேதி கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையர்களின் பிரதான போஷாக்குத் தேவையை நிவர்த்தி செய்வதை அடிப்படையாகக் கொண்டு, இந்த முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்ததுடன், உள்நாட்டு பாற்பண்ணையாளர்களுக்கு உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்துக் கொள்ள உதவியாகவும் அமைந்துள்ளது என்றார்.
“ஆரோக்கியமான போஷாக்குத் தெரிவுகளை, எமது மக்களின் அதிகரித்துச் செல்லும் பாற்பொருட்கள் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், நாம் வழங்க முன்வந்துள்ளோம்” என்றார்.
“புதிய விஸ்தரிப்பினூடாக உள்நாட்டிலிருந்து பெறப்படும் பாலின் அளவை மேம்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதுடன், பாற்பண்ணையாளர்கள் வலையமைப்புக்கு ஊக்குவிப்பூட்டுவதுடன், நீண்ட கால முதலீட்டுத் திட்டங்களுக்கு உதவும் வகையிலும் அமைந்துள்ளது. மேலும், இலங்கையர்களின் தினசரி போஷாக்குத் தெரிவையும் பசுமையான முறையில் மேற்கொள்ளக் கூடியதாக அமைந்திருக்கும்” என்றார்.
குறைந்த கொழுப்புக் கொண்ட அங்கர் திரவ யோகட் ஏழு சதவீதம் மேலதிக சீனி அளவை கொண்டுள்ளது. இந்தத் தயாரிப்பின் ஆரம்பமாக, மூன்று புகழ்பெற்ற சுவைகளில் நாடு முழுவதிலும் கிடைக்கிறது. வனிலா, மாம்பழம் மற்றும் கொடித்தோடை சுவைகளில் இவை கிடைக்கின்றன.
இந்தத் திரவ யோகட் தயாரிப்புக்கு, பயன்படுத்தப்படும் பழங்களும் உள்நாட்டிலிருந்து பெறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.இதில், புரோயயோடிக்ஸ் அடங்கியுள்ளதுடன், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியமான மேலதிக ஃபைபரும் சேர்க்கப்பட்டுள்ளது.
12 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago