2025 ஜூலை 26, சனிக்கிழமை

அதிர்ஷ்டசாலி கார்ட் அங்கத்தவர்களுக்கு அப்பிள் iPhone 7 பரிசு

Gavitha   / 2017 மார்ச் 06 , பி.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாடிக்கையாளர்களின் விசுவாசத்துக்கு வெகுமதியளிக்கும் தனது கொள்கையை மேலும் உறுதி செய்யும் வகையில், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியினால் முன்னெடுக்கப்பட்டிருந்த விருதுகள் வழங்கும் இரவு நிகழ்வில், 50 அதிர்ஷ்டசாலி கார்ட் அங்கத்தவர்களுக்கு புத்தம் புதிய அப்பிள் iPhone 7 அலைபேசிகளை பரிசாக வழங்கியிருந்தது. இந்நிகழ்வு அபான்ஸ் iStoreஇல் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சர்வதேச சந்தையில் அப்பிள் நிறுவனத்தின் புதிய iPhone 7 அறிமுகம் செய்யப்பட்டிருந்ததுடன் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் வெளிநாட்டு ஊக்குவிப்புத்திட்டத்திட்டமான கார்ட் அங்கத்தவர்கள் ஆகக்குறைந்தது 500 அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல் ஒன்றில் செலவிட்டு இந்தப் போட்டிக்கான தகைமையைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பை வழங்கியிருந்தது.  
 2016 நவம்பர் 1ஆம் திகதி ஆரம்பமாகியிருந்த இந்த ஊக்குவிப்புத்திட்டம், 2017 ஜனவரி 31ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் மூலமாக, வங்கியின் சாதாரண செயற்பாடுகளுக்கு அப்பால் சென்று, கார்ட் அங்கத்தவர்களுக்கு விசேடமான அனுகூலங்கள் மற்றும் உயர் சௌகரியத்தையும் வழங்க முன்வந்திருந்தது.   
தமது கார்ட் அங்கத்தவர்களின் சொகுசான வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி தனது வெகுமதியளிக்கும் முறையை விஸ்தரித்திருந்ததுடன், அதன் கார்ட் அங்கத்தவர்களின் விசுவாசத்துக்காக வெகுமதியளிக்கும் முன்னோடியாக வங்கியை நிலைநிறுத்தியுள்ளது.   

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் கார்ட்கள் பிரிவின் தலைமை அதிகாரி நிமேஷ் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “இந்தத் திட்டத்தில் பங்கேற்றிருந்த கார்ட் அங்கத்தவர்களின் எண்ணிக்கை தொடர்பில் நாம் ஆச்சரியமடைந்தோம். எமது கார்ட் அங்கத்தவர்களின் காலத்தின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற வகையிலான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவது தொடர்பில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியைச் சேர்ந்த நாம் கவனம் செலுத்தி வருகிறோம். நவீன தொழில்நுட்பத்துடன் நபர் ஒருவரின் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படுகின்றது என்பதில் வங்கி அதிகளவு நம்பிக்கைக் கொண்டுள்ளது. எமது பெறுமதி வாய்ந்த கார்ட் அங்கத்தவர்களுக்குப் பெறுமதி வாய்ந்த அப்பிள் நவீன அலைபேசியை அன்பளிப்பாக வழங்க தீர்மானித்தோம், அதன் மூலமாக அவர்களுக்கு நவீன வாழ்க்கை முறையை, புகழ்பெற்ற வர்த்தக நாமத்துடன் அனுபவிக்கக்கூடியதாக இருக்கும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X