2025 ஜூலை 23, புதன்கிழமை

அபான்ஸ் நிறுவன முகாமைத்துவ பணிப்பாளருக்கு விருது

Editorial   / 2018 பெப்ரவரி 21 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அபான்ஸ் வியாபாரக் குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பேமன் (டிடோ) பெஸ்டோன்ஜிக்கு கொரிய அரசாங்கம் சமீபத்தில் விசேட விருதை வழங்கி கௌரவித்தது.

கடந்த சில வருடங்களாக இலங்கை வியாபாரத் துறை மேம்பாட்டுக்காக வழங்கிவரும் அளப்பரிய அர்ப்பணிப்புமிக்க சேவைகள் மற்றும் இலங்கை, தென்கொரியாவுக்கு இடையிலான வணிக ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதற்காக, வழங்கும் அர்ப்பணிப்புமிக்க சேவைக்காக பேமன் பெஸ்டோன்ஜிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

இலங்கையிலுள்ள கொரிய விருந்தினர்கள் மற்றும் உள்நாட்டு வணிகப் பிரமுகர்கள் பலரின் பங்கேற்பில் இலங்கை தென்கொரிய தூதரகத்தினால் அண்மையில் கொழும்பு கலதாரி ஹோட்டலில் மிகவும் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வின் போது, பேமன் பெஸ்டோன்ஜிக்கு இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.   

இந்த விருதைத் தனக்கு வழங்கியது தொடர்பாக தனதும் தனது குடும்பத்தாரினதும் மனம் நிறைவான நன்றிகளை தென் கொரிய அரசாங்கத்துக்கு பேமன் (டிடோ) பெஸ்டோன்ஜி தெரிவித்தார். 

உலகின் பிரமாண்ட தென்கொரிய நிறுவனமான LG நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றிடக் கிடைத்தமை, தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்த அவர், “இலங்கை மக்களின் மனம் வென்ற விற்பனை நாமமாக தற்போது LG திகழ்ந்து வருகிறது” என மேலும் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், “LG உற்பத்திகளின் உயர் தரம் மற்றும் அதன் நவீன தொழில்நுட்பமே LG உற்பத்திகளின் தரத்தை முதல் நிலையில் நிலைநாட்டுவதற்கு உருதுணையாக அமைந்துள்ளன” என அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கான கொரியாவின் தூதுவர் ஹியோன் லீ இடமிருந்து தனக்கான விசேட விருதைப் பெற்றுக்கொண்ட அபான்ஸ் முகாமைத்துவப் பணிப்பாளர் பேமன் பெஸ்டோன்ஜி மேலும் தெரிவிக்கையில், “கடந்த 30 வருடங்களுக்கு மேல், அபான்ஸ் மற்றும் LG நிறுவனங்களுக்கு இடையிலான பிணைப்பையும் ஒத்துழைப்பையும் எண்ணி நான் பெருமிதம் கொள்கிறேன்” என்றார்.

அபான்ஸ் குழும ஸ்தாபகர் திருமதி. அபான் பெஸ்டோன்ஜி அவர்களுடன், 30 வருடங்களுக்கும் அதிகமான  காலமாக ஒன்றிணைந்து பணியாற்றியுள்ள பேமன் பெஸ்டோன்ஜி, அபான்ஸ் நிறுவனத்தின் தற்போதைய முகாமைத்துவப் பணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

அவரது உயரிய சந்தைப்படுத்தல் அனுபவம் மற்றும் வணிக ஞானத்தால் அபான்ஸ் PLC இன் நாமம் இலங்கையர்கள் அனைவர் மனதிலும் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .