Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயர் பதவி வகிக்கும் அதிகாரிகளுக்கு கம்பீரமான மற்றும் நேர்த்தியான தோற்றத்தை ஏற்படுத்தி ஆடையணிவதில் வலிமையான வரப்பிரசாதத்தை வழங்க Leonardo முன்வந்துள்ளது. உலகின் முதற்தர துணி வகையான Leonard ஐ உபயோகித்து தயாரிக்கப்படும் Leonard சட்டைகளின் தையல் பொருத்து மற்றும் நவீன பாணியானது சர்வதேச நவநாகரிகப் போக்குகளுக்கு ஏற்ப நவீன வடிவம் கொண்டவை. துல்லியமான கவனம், விவரமான வேலைப்பாடு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறங்களின் இணைப்புக்களுடன் உயர் பதவிகளை வகிக்கும் அதிகாரிகளால் விரும்பப்படுகின்ற Leonard சட்டைகளின் நவீன நுட்பங்களுடனான வடிவங்கள், அணிபவரின் மனவுணர்வை மேம்படுத்தும் வகையில் மனதுக்கு இசைவான நவநாகரிகப் பாணிகளை வழங்குகின்றன.
இலங்கையின் Leonard வர்த்தக நாமத்தினால் முன்னெடுக்கப்படும் வியப்பூட்டும் ஊக்குவிப்புப் பிரசாரம் தொடர்பாக எமரல்ட் இன்டர்நஷனல் (பிரைவெட்) லிமிட்டெட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான ஏ.எப்.எம். இக்ரம் கருத்து வெளியிடுகையில், “இலங்கையிலுள்ள உயர் பதவி வகிக்கும் அதிகாரிகள் மற்றும் வர்த்தகத் துறை பிரபலங்களுக்கு Leonard வர்த்தகநாம சட்டைகளை அறிமுகம் செய்து வைப்பதையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.
உள்நாட்டில் ஆடையணித் தொழிற்றுறையில், ஆண்களுக்கான பிரத்தியேகமான மற்றும் கண்கவர் சட்டைகள் போதிய அளவில் இன்மையால் சிறந்த பகுத்தறிவும், நவநாகரிகம் தொடர்பில் அக்கறையும் கொண்டுள்ளதுடன், தமது வாழ்க்கை முறையில் நவநாகரிகத்தை ஒரு அங்கமாகக் கொண்டு, தரத்தின் பெறுமானதுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற ஆண்களுக்காக Leonard அறிமுகமாக்கப்பட்டுள்ளது. கம்பீரமான தோற்றத்திற்கு நேர்த்தியாக ஆடையணிவது அவசியமாக உள்ளதுடன், Leonard சட்டைகளை அணிபவரின் தனித்துவமே மிகவும் அலாதியானது. நாட்டில் தத்தமது துறைகளில் வெற்றிகரமாகக் கால்பதித்துள்ள மற்றும் முன்னணி பிரபல ஆண்களின் விருப்பத்திற்குரிய தெரிவாக Leonard மாறும் என்பதில் நாம் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளோம்”என்று குறிப்பிட்டார்.
24 minute ago
33 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
33 minute ago
2 hours ago
2 hours ago