2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ஆறு அடி உயர ஊதுபத்தி

Gavitha   / 2016 செப்டெம்பர் 18 , பி.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வருடந்தோறும் நடைபெறும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழாவின் போது தபஸ்யா நிறுவனத்தயாரிப்பான தபஸ்யா ஊதுபத்திகளை ஆறடி உயரத்துக்கு உற்பத்தி செய்து பக்தர்களுக்கு அருள் கிடைக்கும் வகையில் சமர்ப்பித்திருந்தது.  

இந்நிறுவனத்தின் விசேட தயாரிப்பான ஆறடி உயரமான தபஸ்யா ஊதுபத்திகள் ஆலயத்தின் வெளி வளாகத்தில் விசேடமாக அமைக்கப்பட்டிருந்த அரங்கில் ஏற்றப்பட்டு அவற்றின் நறுமணம் அப்பகுதியெங்கும் பரவியிருந்தன.

இந்த ஊதுபத்தியிலிருந்து எழுந்த நறுமணம் மக்களின் மனங்களைக் கவர்ந்திழுத்ததையும் எங்கும் காணக்கூடியதாக இருந்தது. திருவிழாவில் சகல பாகங்களிலிருந்தும் கலந்து கொண்டவர்களுக்கு தபஸ்யா ஊதுபத்திகள் இலவசமாக வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X