2025 ஜூலை 23, புதன்கிழமை

ஆலயங்களுக்கு சுவதேஷி ஒளியூட்டல்

Editorial   / 2018 ஜனவரி 19 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுவதேஷி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் பிஎல்சி மூலம் தொடர்ச்சியான 16 ஆண்டாக, சப்ரகமுவ சமன் ஆலயத்துக்கு ஒளியூட்டியிருந்தது.

இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள சப்ரகமுவ மஹா சமன் ஆலயம், 13ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் அரசனாக விளங்கிய, இரண்டாம் பராக்கிரமபாகு என்பவரால் நிர்மாணிக்கப்பட்டதாகும். ஆலயத்தின் தற்போதைய அமைப்பு, 17ஆம் நூற்றாண்டில் அரசனாகத் திகழ்ந்த, இரண்டாம் இராஜசிங்கனால் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வு வருடாந்த எசல திருவிழா காலப்பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு ‘சுவதேஷி கொஹோம்ப ஆலோக பூஜா சத்காரய’ என பெயரிடப்பட்டிருந்தது.   

இலங்கையின் மூன்றாவது இராஜதானியாக தம்பதெனியா திகழ்ந்ததுடன், இரண்டாம் பராக்கிரமபாகுவினால் இந்த விஹாரை நிர்மாணிக்கப்பட்டது. 13 ஆண்டுகள் அங்கு பேணப்பட்ட புனித தந்த தாதுவுக்காக தலதா பெரஹர நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டது.  

இந்த ஒளியூட்டல் குறித்து சுவதேஷி நிறுவனத்தின் தலைமை அதிகாரி திருமதி. அமரி விஜேவர்த்தன கருத்து வெளியிடுகையில், “கடந்த தசாப்த காலப்பகுதியில் நாம் இந்த ஒளியூட்டலை மேற்கொண்டு வந்துள்ளோம்.

இதனால் பல பக்தர்கள் பெரும் நன்மையடைந்துள்ளனர். இந்த ஆண்டு ஆலயத்தின் பெரஹரா நிகழ்வுகள் மிகவும் கோலாகலமான முறையில் அமைந்திருந்தன. பார்வையிடுவதற்காக திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களையும் பார்வையாளர்களையும் கவர்வதாக அமைந்திருந்தது’ என்றார்.  

1927ம் ஆண்டு ரஜமகா விகாரையின் புதுப்பித்தல் செயற்பாடுகளை ஹெலெனா விஜேவர்தன லமாதெனி முன்னெடுத்திருந்தார். இவரின் பேரப்பிள்ளையாக அமரி விஜேவர்தன திகழ்கிறார்.  

சுவதேஷி நிறுவனத்தின் வருடாந்த சமூக பொறுப்புணர்வு செயற்திட்டத்துக்கு அமைவாக நாட்டில் இடம்பெறும் 4 காப்பு கடவுளுக்கான திருவிழாக்களின் ஒளியூட்டல் செயற்பாட்டை ஒவ்வொரு வருடமும் முன்னெடுத்து வருகிறது.

களனி ரஜமஹா விஹாரை (விபீஷண தெய்வம்), றுகுணு கதிர்காம ஆலயம் (முருகன்), இரத்தினபுரி சமன் ஆலயம் (சமன் தெய்வம்) மற்றும் தெவுந்தர உத்பலாவரண ஸ்ரீ விஷ்ணு மஹா ஆலயம் (விஷ்ணு தெய்வம்) ஆகிய நான்கு தெய்வங்களுக்காக இடம்பெறும் திருவிழாக்களின் போது ஒளியூட்டலை சுவதேஷி மேற்கொண்டு வருகிறது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .