Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2021 செப்டெம்பர் 03 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறப்பர் மர இலைகளில் வேகமாகப் பரவும் ஒரு விதமான நோயைக் கட்டுப்படுத்துவதற்கு நாட்டில் கிருமிநாசினி இன்மை காரணமாக இந்த ஆண்டில் இறப்பர் உற்பத்தி சுமார் 15 – 20 சதவீத வீழ்ச்சியைப் பதிவு செய்யும் என தாம் எதிர்பார்ப்பதாக இறப்பர் தொழிற்துறை தெரிவித்துள்ளது.
விளைச்சல் குறையும்பட்சத்தில் இறப்பர் செய்கையில் ஈடுபடுவோர் மாற்று செய்கைகளுக்கு மாற வேண்டிய நிலைக்கு முகங்கொடுப்பார்கள் எனவும், முதிர்ச்சியடையாத இளம் இறப்பர் மரங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாரியளவு பண்ணைகள் மற்றும் சிறிய பயிர்ச் செய்கையாளர்களால் பயிரிடப்பட்டுள்ள 107,000 ஹெக்டெயர் பகுதியில் சுமார் 20,000 ஹெக்டெயர் பங்கஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதென இறப்பர் வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.
நாட்டினுள் விவசாய இரசாயன இறக்குமதிக்கு ஜனாதிபதி தடை விதித்துள்ள நிலையில், இறப்பர் மரங்களைப் பாதித்துள்ள இந்த நோயானது இலகுவில் புரியும் வகையில் தெரிவிப்பதானால் கொவிட்-19 தொற்றைப் போன்றது. வேகமாகப் பரவுகின்றது என இறப்பர் வர்த்தக சம்மேளனத்தின் உப தவிசாளர் மனோஜ் உடுகம்பொல தெரிவித்தார்.
இறப்பர் பண்ணைகளுக்கு பங்கஸ் அழிப்பான்கள், கார்பன்டைசிம் மற்றும் ஹெக்ஸாகொனாசோல் போன்ற இரசாயனப் பதார்த்தங்களும் தாவரங்கள் மீட்சியடைவதற்கு உரமும் தேவைப்படுகின்றன.
ஆனாலும் கடந்த சில மாதங்களாக எமக்கு எவ்விதமான உரமும் கிருமிநாசினிகளும் கிடைப்பதில்லை. இந்நிலையில் இந்த நோய் பரவல் காரணமாக தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகின்றது. இந்த நிலை தொடருமானால் அடுத்த வருடமளவில் இந்தத் துறை நிலைத்திருக்குமா எனும் கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இறப்பர் செய்கையில் ஈடுபடும் நிறுவனங்கள் ஏலம், மிளகு மற்றும் கருவா போன்ற மாற்றுப் பயிர்ச் செய்கைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago