Janu / 2026 ஏப்ரல் 21 , பி.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அதன் பொருளாதார மீட்சியை அனைத்து மக்களுக்குமான நிலையான சுபீட்சமாக மாற்றுவதற்கு உதவுவதில், ஒரு உறுதியான பங்காளராகவும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்தும் இருக்குமென சர்வதேச நாணய நிதியம் மீண்டும் உறுதிப்படுத்தியது.
இலங்கை அதன் நான்கு ஆண்டுகால '3 பில்லியன் டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதி' (EFF) நிகழ்ச்சித்திட்டத்தை அடுத்த ஆண்டு (2027) நடுப்பகுதியில் நிறைவு செய்யவுள்ள நிலையில், பெரும் சவால்களுக்கு மத்தியிலும் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதில் நாடு ஈர்க்கக்கூடிய முன்னேற்றத்தை அடைந்துள்ள தருணத்தில் இந்த உறுதிமொழி கிடைத்துள்ளது.
உலகளாவிய பொருளாதாரத் தளம்பல்கள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உள்நாட்டு, வெளிநாட்டு அதிர்ச்சிகளைக் கருத்தில்கொண்டு, இலங்கை அதன் நிதியியல் தாங்கியிருப்புகளை (Financial Buffers) அதிகரிக்க வேண்டும் என்றும், பொருளாதார மீண்டெழும் திறனை வலுப்படுத்தும் சீர்திருத்தங்களைத் தொடர வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்துகிறது.
"தசாப்தங்களில் கண்டிராத மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு வருகிறது. உறுதிப்பாட்டை மீட்டெடுப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமடைந்துள்ளது. இருப்பினும், பொருளாதாரம் இன்னும் பலவீனமாகவே இருப்பதை நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். கடினமாக உழைத்துப் பெற்ற இந்த வெற்றிகளை உறுதிப்படுத்தவும் அதன் மேல் வளர்ச்சியை உருவாக்கவும் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் அவசியம்," என்று சர்வதேச நாணய நிதிய தூதுக்குழுத் தலைவர் இவான் பாபஜார்ஜியு (Ivan Pavpargeorgiou), அதன் 15 நாள் விஜயத்தை நிறைவு செய்து 'Daily FT' இதழுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் தெரிவித்தார்.
கேள்வி: நான்கு ஆண்டுகால விரிவாக்கப்பட்ட நிதி வசதி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், குறிப்பாக நாடு எதிர்கொண்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்களுக்கு மத்தியில் இதுவரையிலான இலங்கையின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்? இதுவரையில் எட்டப்பட்ட முக்கிய சாதனைகள் எவை?
பதில்: சர்வதேச நாணய நிதிய ஆதரவுடனான நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், வெளிநாட்டு அதிர்ச்சிகள் உட்படப் பாரிய சவால்களை எதிர்கொண்ட போதிலும், அதன் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதில் இலங்கை உளநிறைவான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. 2022-ஆம் ஆண்டின் கடுமையான நெருக்கடியின் பின்னர் – அதாவது, பொருளாதாரம் கடுமையாகச் சுருங்கி, பணவீக்கம் ஏறத்தாழ 70% ஆக உயர்ந்திருந்தது. இலங்கை இப்போது ஒரு வலுவான மீட்சியை அடைந்து வருகிறது.
பொருளாதார வளர்ச்சி 2025-இல் ஏறத்தாழ 5% ஆக மீண்டுள்ளது. இது 2022-இன் கடுமையான பொருளாதாரப் பின்னடைவிலிருந்து ஏற்பட்ட ஒரு வியத்தகு மாற்றமாகும். கடந்த தசாப்தத்தின் அதீத விலை உயர்வுக்குப் பின்னர், பணவீக்கம் ஒற்றை இலக்கத்திற்குக் (2026 ஆரம்பத்தில் ஏறத்தாழ 2%) கொண்டு வரப்பட்டுள்ளது. இது நுகர்வோர் விலைகள் பெருமளவில் நிலைபெற்றுள்ளதைக் காட்டுகிறது.
இறைத்துறையைப் (Fiscal sector) பொறுத்தவரை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசாங்கத்தின் வருவாய் சுமார் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இது 2022-இல் ஏறத்தாழ 7% ஆக இருந்தது, 2025-இல் 15%-இற்கும் அதிகமாக உயர்வைடைந்துள்ளது. இதற்கு விரிவான வரிச்சீர்திருத்தங்களும், வரி செலுத்துதல் மேம்பட்டதும் காரணமாகும். நாட்டின் பொதுக்கடன் மறுசீரமைக்கப்பட்டு, ஒரு நிலைபேறான பாதைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. படுகடன் மறுசீரமைப்புச் செயல்முறை தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது.
அதேவேளை, நெருக்கடியின் போது பூச்சியத்தை அண்மித்திருந்த வெளிநாட்டு நாணய ஒதுக்குகளை, 2026 பெப்ரவரி இறுதியில் 7.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இலங்கை மத்திய வங்கி மீண்டும் கட்டியெழுப்பியுள்ளது. இது வெளிநாட்டு அதிர்ச்சிகளுக்கு எதிரான இலங்கையின் நிதியியல் தாங்கியிருப்புகளைக் கணிசமாக உயர்த்தியுள்ளது.
இந்தச் சாதனைகள் அனைத்தும் திட்டத்தின் கீழ் கடினமான ஆனால் அவசியமான சீர்திருத்தங்களைச் செய்வதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பின் பலனைப் பிரதிபலிக்கின்றன. கடுமையான சேதங்களை விளைவித்து, நிகழ்ச்சித்திட்டத்தின் மீளாய்வு அட்டவணையைப் பிற்போடுவதற்கு நிர்ப்பந்தித்த 2025-இன் இறுதியில் ஏற்பட்ட 'டிட்வா' புயல், மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக அதிகரித்த இறக்குமதிச் செலவுகள், சுற்றுலா மற்றும் ஏற்றுமதி வருவாய்கள் மீதான அச்சுறுத்தல் போன்ற சவால்களுக்கு மத்தியிலும் இந்த வெற்றிகள் எட்டப்பட்டுள்ளன.
கேள்வி: அடுத்தடுத்து நிகழும் வெளிநாட்டு அதிர்ச்சிகளைக் கையாள இலங்கை அதன் நிதியியல் தாங்கியிருப்புகளை எவ்வாறு மேலும் பலப்படுத்த முடியும்?
பதில்: நாட்டின் நிதியியல் தாங்கியிருப்புகளை அதிகரிப்பதும், பொருளாதாரத்தின் மீண்டெழும் திறனை வலுப்படுத்தும் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதும் முக்கியமானதாகும். நடைமுறை ரீதியாக இதன்பொருள்:

கேள்வி: தற்போதைய 5% பணவீக்க இலக்கைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்: தற்போதைய 5% பணவீக்க இலக்கானது இலங்கையின் நிலைப்படுத்தல் கட்டத்தில் எதிர்பார்ப்புகளை வழிநடத்தியுள்ளது. மத்திய வங்கிச் சட்டத்தின்படி ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் இந்த இலக்கு மீளாய்வு செய்யப்படும். இப்போது 5% என்பது "மிக அதிகம்" என்று சொல்வது முதிர்ச்சியற்றது. இது தரவு மற்றும் பகுப்பாய்வு சார்ந்தது. வளரும் நாடுகள் பெரும்பாலும் 4-5% இலக்கை நிர்ணயிப்பார்கள். எதிர்காலத்தில் நிலைமைகள் மேலும் மேம்படும் போது, இந்த இலக்கைக் குறைப்பது குறித்துப் பரிசீலிக்கலாம்.
கேள்வி: இலங்கை அரசாங்கம் எந்தெந்தத் துறைகளில் அதன் அர்ப்பணிப்பையும் செயற்பாட்டையும் மேம்படுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் விரும்புகிறது?
பதில்: அரசாங்கம் ஏற்கனவே பல கடினமான சீர்திருத்தங்களைச் செய்துள்ளது. முன்னோக்கிச் செல்கையில், பின்வரும் துறைகளில் வேகத்தை அதிகரிக்குமாறு ஊக்குவிக்கிறோம்:
கேள்வி: 2027-இல் விரிவாக்கப்பட்ட நிதி வசதி நிகழ்ச்சித்திட்டம் முடிந்த பிறகு, இலங்கையினால் சுயமாக நிர்வகிக்க முடியும் என சர்வதேச நாணய நிதியம் நம்புகிறதா?
பதில்: இந்தத் திட்டத்தின் நோக்கமே இலங்கை அதன் சொந்தக் காலில் நிற்பதற்கு உதவுவதுதான். இலங்கை சரியான பாதையில் செல்கிறது. ஆனால் வெற்றி என்பது திட்டம் முடிந்த பிறகும் சரியான கொள்கைகளைத் தொடர்வதிலேயே தங்கியுள்ளது. அரசாங்கம் அதன் பொதுநிதியைத் தொடர்ந்து பலப்படுத்த வேண்டும்; மத்திய வங்கி பணம் அச்சிடுவதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக, 2027-இல் திட்டம் முடிவடைவது சர்வதேச நாணய நிதியத்துடனான உறவின் முடிவு அல்ல. நாங்கள் தொழில்நுட்ப உதவிகளைத் தொடர்ந்து வழங்குவோம்.

23 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
52 minute ago