2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இலங்கை வங்கியின் e - கூற்று சீட்டிழுப்பு

Editorial   / 2018 மார்ச் 22 , பி.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வங்கி e - கூற்று வசதிகளுடன் இணைந்துள்ள வாடிக்கையாளர்களுக்கு இடையிலான சீட்டிழுப்பை 2018 மார்ச் 13இல் வெற்றிகரமாக நடாத்தியது.  

இந்நிகழ்வில், முதலாவது பரிசாக 48’ ஸ்மார்ட் LED தொலைக்காட்சிப் பெட்டியும் இரண்டாவது பரிசாக, ஐ பேட் (iPad) (Pro 12.9 128G8)உம், மூன்றாவது பரிசாக, Apple i-Phone உம், ஐம்பது ஆறுதல் பரிசுகளாக ஸ்மார்ட் போன்களும் வெற்றியீட்டியோருக்கு வழங்க சீட்டிழுக்கப்பட்டன.

பசுமை வங்கியியல் பூர்வாங்க வேலைகளினதும் டிஜிற்றல் நிலைமாற்றச் செய்முறையினதும் ஒரு பகுதியாக, சுற்றாடலைப் பாதுகாக்கும் அதேநேரத்தில் எவையேனும் மேலதிகச் செலவு இன்றி e - மெயில் ஊடாக உரிய நேரத்தில் தங்களது கூற்றுகளை பெறுவதற்கு முடியுமாகும் விதத்தில், 2016ஆம் ஆண்டில் வங்கி e - கூற்றுகள் வசதியை அறிமுகம் செய்தது.  

இலங்கை வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு இவ் எண்ணக்கருவை ஊக்குவிக்கையில் வெளிநாட்டு நாணயக்கணக்கு மற்றும் நடைமுறைக்கணக்கு வைத்திருப்பவர்கள் எல்லோருக்கும் வங்கியின் பசுமை பூர்வாங்க வேலைகளில் கலந்துகொண்டு, e - கூற்றுகளுக்குப் பதிவுசெய்வதன் மூலம் பரிசுகளை வென்றெடுப்பதற்கும் சீட்டிழுப்பொன்றை அறிவித்தது.

ஊக்குவிப்பு 2018 பெப்ரவரி 28இல் முடிவடைந்தது. இச்சீட்டிழுப்பு கணக்காய்வாளர் நாயகத்திணைக்களத்தினதும் வங்கியின் தகவல் அமைப்பு கணக்காய்வு மற்றும் சட்டப் பிரிவுகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளினதும் கண்காணிப்பின் கீழ் நடாத்தப்பட்டது.

பரிசுகளை சேகரித்துக்கொள்வதற்கு வெற்றியாளர்களின் பெயர்கள் காலக்கிரமத்தில் அறிவிக்கப்படும்.  
“e - கூற்றுகளுக்கு பதிவு செய்வது சுற்றாடலுக்குப் போன்றே சமூகம், வாடிக்கையாளர், வங்கி உட்பட பங்காளர்களுக்கும் நன்மை பயக்கின்றது. குறித்த நேரத்தில் எத்தகைய செலவுமின்றி மேற்கொள்ள வாடிக்கையாளருக்கு வசதி வழங்குகின்றது.

இப்பூர்வாங்க வேலைகள் வாடிக்கையாளரை மையமாகக் கொண்டு, டிஜிற்றல் மயப்படுத்திய சேவைகளை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு, அதன் தொகுதித்திட்டத்துடன் முதலாவதாக முன்னுரிமை வழங்கும் முயற்சியாக விளங்குகின்றது” என இலங்கை வங்கி பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர் பொது முகாமையாளர் செனரத் பண்டார    குறிப்பிட்டார்.  

இலங்கையின் வங்கியியல் தொழிலில் 78 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்துடன் நாட்டில் மிகவும் உறுதியான நம்பகமான வங்கியாக இலங்கை பூராக, இலங்கையர்கள் எல்லோருக்கும் உதவி, நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி, மக்களது வாழ்வைக் கட்டியெழுப்புவதாலும் அவர்களை நிதியியல்ரீதியில் சக்திவாய்ந்தவர்களாக்குவதற்கும் தலைமைத்துவத்தை வழங்குகின்றது.

உலகில் 1,000 தலைசிறந்த வங்கிகளுள் ஒன்றாக (நாட்டில் முதற்தரம்) என ஐக்கிய இராச்சிய (UK) ‘த பேங்கர்’ சஞ்சகை நிரற்படுத்தியுள்ளது. 2018 SLIM நீல்சன்ஸ் மக்கள் விருதுகள் நிகழ்வில் ஆண்டின் மக்கள் சேவை வணிகச் சின்னத்துக்கான விருது, அதாவது BOC சின்னம் பெற்றுக்கொண்டது.

நாட்டில் உறுதிமிக்க வங்கி என இலங்கை வங்கிக்கு பெயர் சூட்டியுள்ளதுடன் ‘த ஏஷியன் பேங்கர்’ சஞ்சிகை நிரற்படுத்தியுள்ளவாறு முறையே, 2012, 2013, 2014, 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் இலங்கை வங்கி 2015ஆம் ஆண்டு தேசிய வியாபார சிறந்த தொழில்முயற்சி விருது வழங்கல் வைபவத்தில் மேலும் 5 வெற்றிகளுடன் முழுமொத்தமாக தங்க விருதையும் பெற்றுக்கொண்டது.

இந்தியாவில் மும்பாய் நகரில் தலைமையகத்தை கொண்டுள்ள பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரிகளின் சபை (CMO Council) 2013 ஆண்டில், ‘ஆசியாவின் சிறந்த வர்த்தக சின்னம்’ எனவும் தொடர்ந்து எட்டு வருடங்கள், ‘நாட்டின் முதற்தர வர்த்தகச் சின்னம்’ என பிராண்ட் பைனான்ஸ் லங்காவும் இலங்கை வங்கியைத் தரப்படுத்தியுள்ளன.

அண்மைக்காலத்தில் வங்கி ரூபாய் 1.5 ட்ரில்லியன் சொத்துகளையும் ரூபாய் ஒரு ட்ரில்லியனுக்கு மேல் வைப்புகளையும் கொண்டுள்ளது. வங்கிச் சாதனையை மையமாகக் கொண்டு பிச் ரேட்டிங் லங்கா நிறுவனம் இலங்கை வங்கியை AA+(1ka) எனத் தரப்படுத்தியுள்ளதுடன், இது உள்நாட்டு வங்கியொன்றுக்கு வழங்கப்பட்ட அதிஉயர்ந்த தரமாகும்.

ICRA லங்கா நிறுவனம் அதிஉயர் கடன் தரம் சதவீதத்தை வழங்கியுள்ளதுடன், இது AAA தரம் ஆகும். தொழில் அதிபர் சின்னம் நிறுவனம் ஒழுங்கு செய்த, ஆசியாவின் மிகச் சிறந்த தொழில் அதிபர் சின்னம் விருதுகளில், 2016ஆம் ஆண்டுக்கான மிகச் சிறந்த தொழில் அதிபர் விருதை வென்றது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .