2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இலங்கையர்களுக்கு சிங்கப்பூரில் புலமைப்பரிசிலை வழங்க பிறீமா திட்டம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 30 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிங்கப்பூர் முகாமைத்துவ பல்கலைக்கழகத்தில் (SMU) தமது பட்டப்படிப்பை தொடர இணையும் இலங்கையின் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பங்களிப்பில் புதிய புலமைப்பரிசில் திட்டமொன்றை நிறுவ பிறீமா லிமிட்டெட் முன்வந்துள்ளது. சிங்கப்பூர் அரசாங்கத்தின் பங்களிப்புகளுடன், பிறீமா சிலோன் புலமைப்பரிசில் திட்டத்தின் மொத்த நிதித் தொகை 3 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்துள்ளது.

பிறீமா லிமிட்டெட் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பிறிமஸ் செங் மற்றும் SMU தலைவர் பேராசிரியர் ஆர்னொட் டி மெயெர் ஆகியோர் அன்பளிப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். சிங்கப்பூருக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் நிமல் வீரரட்ன மற்றும் பிறீமா லிமிட்டெட், SMUஇன் சிரேஷ்ட முகாமைத்துவ அங்கத்தவர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பிறிமஸ் செங் கருத்துத் தெரிவிக்கையில், “பிறீமா சிலோன் பிரைவட் லிமிட்டெட்டின் 40 வருட பூர்த்தியை குறிக்கும் வகையில், பல்கலைக்கழகத்தில் பயிலும் இலங்கையின் மாணவர்களின் நலன் கருதி ‘பிறீமா சிலோன் புலமைப்பரிசில்’| திட்டத்தை SMU க்கு அன்பளிப்பு செய்துள்ளமை மிகவும் பொருத்தமானதாக அமைந்திருக்கும் என நாம் கருதுகிறோம்” என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .