S.Sekar / 2022 பெப்ரவரி 18 , மு.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
DFCC வங்கி தனது வாடிக்கையாளர்களை மையப்படுத்திய சேவை மற்றும் டிஜிட்டல் புத்தாக்கம் ஆகியவற்றில் கொண்டுள்ள அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், Euromoney ஆல் இலங்கையில் பண முகாமைத்துவத்தில் சந்தையில் முன்னிலை வகிக்கும் வங்கியாக 2021 ஆம் ஆண்டிற்கான வாக்களிப்பில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. DFCC வங்கி தனது DFCC iConnect என்ற அதன் புரட்சிகரமான இலத்திரனியல் வங்கிச்சேவைத் தளமேடை மூலமாக வழங்கும் புத்தாக்கமான பண முகாமைத்துவ முன்மொழிவுக்காக இந்த அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளது.

1969 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட Euromoney சஞ்சிகை, உலகளாவிய நிதி உலகம் மற்றும் மூலதனச் சந்தைகளுக்கான முதன்மை சஞ்சிகையாகும். Euromoney முன்னெடுக்கும் பண முகாமைத்துவ கணக்கெடுப்பு உலகளவில் முன்னணி பண முகாமையாளர்கள், திறைசேரியாளர்கள் மற்றும் நிதி அதிகாரிகளிடமிருந்து கருத்து மூலமாக பதில்களைப் பெற்றுக்கொள்வதுடன், இது உலகளாவிய பண முகாமைத்துவத் துறைக்கான முக்கியக் கணக்கெடுப்பாகக் கருதப்படுகிறது, மேலும் சர்வதேச சந்தையில் பணப்புழக்கம் மற்றும் பண முகாமைத்துவ துறைக்கு மிகவும் விரிவான வழிகாட்டியாகவும் கருதப்படுகிறது. 2021 ஆம் ஆண்டிற்கான பண முகாமைத்துவக் கணக்கெடுப்பு 20 ஆவது ஆண்டாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பாகும். DFCC வங்கி இரண்டாவது முறையாக இதில் பங்கேற்று, முதல் முறையாக சந்தை முன்னிலை ஸ்தானத்தை கைப்பற்றியுள்ளது. 2020 ஆம் ஆண்டில் DFCC வங்கி பண முகாமைத்துவத்தில் சிறந்த சேவைக்கான விருதை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
DFCC வங்கியின் சாதனை குறித்து அதன் தலைமை நிர்வாக அதிகாரியான திமால் பெரேரா அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “2021 ஆம் ஆண்டிற்காக Euromoney சஞ்சிகையால் பண முகாமைத்துவத்தில் சந்தை முன்னிலையாளராக வாக்களிக்கப்பட்டதையிட்டு DFCC வங்கி பெருமையடைகிறது. வங்கி சந்தை முன்னிலையாளர் விருதை வென்றது இதுவே முதல் முறை என்பதுடன், 2020 ஆம் ஆண்டில் சிறந்த சேவைக்கான விருதை வென்றதைத் தொடர்ந்து தற்போது இந்த விருதையும் வென்றுள்ளமை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாம் அறிமுகப்படுத்தியிருந்த பண முகாமைத்துவ முன்மொழிவின் சாதனைக்கு எடுத்துக்காட்டு. இந்த விருதுக்காக எங்களுக்கு வாக்களித்த எங்கள் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். தொழில்துறையில் முன்னணி வகிக்கும் மற்றும் உலகத்தரம் வாய்ந்த முன்மொழிவை உருவாக்குவதில் எங்கள் அணியின் முயற்சிகளையிட்டு நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அதே நேரத்தில் எங்கள் புத்தாக்கமான iConnect அமைப்பு, இந்த பாராட்டுக்கான மையப்புள்ளியாக உள்ளது. இது வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட மற்றும் டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்பட்ட ஒரு புத்தாக்கமான தீர்வைக் கொண்டுவருவதற்கான எங்கள் முயற்சிகளின் வெற்றியைக் காண்பிக்கிறது,” என்று குறிப்பிட்டார்.
7 hours ago
28 Oct 2025
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
28 Oct 2025
28 Oct 2025