Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஜூலை 05 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் சுற்றுலாத்துறை விடுதிகள்சார் தொழிற்றுறையில் ஈடுபட்டுள்ள YohoBed நிறுவனம், தனது தொழில்நுட்பம்சார் புத்தாக்கங்கள் மற்றும் விரைவான வளர்ச்சி போன்றவற்றின் ஊடாக, ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே சந்தையில் துறைசார் அங்கிகாரத்தைப் பெற்று விளங்குகின்றது.
அதுபோல, பாரியளவில் வளர்ந்து வருகின்ற சுற்றுலாத்துறை மற்றும் நாளடைவில் மாறுபட்டு வருகின்ற சுற்றுலாவாசிகளின் பயண முறைமைகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, முற்றிலும் மாறுபட்ட சேவைகளை வழங்குவதில் முன்னோடியாகத் திகழ்கின்றது.
மேலும், மலிவானதும் தரத்தில் சிறந்ததுமான தங்குமிட வசதிகளை வழங்குவதன் மூலம், இலகுவான சுற்றுலா பயணங்களைச் சகல பயணிகளுக்கும் சாத்தியமானதாக மாற்றியமைத்துள்ளது.
“அயற் பிரதேசங்களுக்கு செல்வதும், புதிய கலாசாரங்களைக் கண்டறிவதும், புதிய மக்களைச் சந்திப்பதும், புதிய இடங்களின் அனுபவங்களைப் பெறுவதும் இன்று மக்களின் தேவையாக இருக்கின்றது என்று நாம் நன்கு அறிந்திருக்கின்றோம். அந்தப் புரிந்துணர்வின் அடிப்படையிலேயே நாம் இந்நிறுவனத்தை ஸ்தாபித்திருக்கின்றோம். மேலும் நவீன, நடைமுறைக்கேற்ப மாறுபடுகின்ற சுற்றுலாத்துறையின் பாங்கினை முறையாகக் கண்டறிந்து விவரிப்பதில் பங்களிப்புச் செய்யும் ஆற்றல்மிக்க எமது தரவு விஞ்ஞானிகளின் உதவியோடு நடப்பு நிலைவரங்களைத் தொடர்ச்சியாக அவதானித்து வருகின்றோம்” என்று YohoBed நிறுவனத்தின் தலைவர் அஜித் பெர்ணான்டோ தெரிவித்தார்.
கடந்த வருடத்தில் மாத்திரம் சுமார் 20,000 பயணிகளுக்குச் சிரமமற்ற மற்றும் நம்பகமான தங்குமிட அனுபவத்தை YohoBed நிறுவனம் வழங்கியிருக்கின்றது. ரஷ்யா, சீனா, இந்தியா, மத்திய கிழக்கு, ஐக்கிய அமெரிக்க இராச்சியம் மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகள் Yoho bed நிறுவனத்தின் தங்குமிட வசதிகளுக்கு மிகுந்த ஆதரவை வழங்கி வருகின்றனர்.
சாதாரண முறைமைகளைக் காட்டிலும் சிறப்பான விருந்தோம்பல் சேவைகளைத் தன்னகத்தே கொண்டிருந்த போதிலும், அனுபவமின்மை மற்றும் தொழில்நுட்ப சிறப்புத் தேர்ச்சியின்மை போன்றவற்றின் காரணமாக, பெரும்பாலான விடுதிச் சேவைகளால் இத்துறையில் நிலைத்து நிற்க முடிவதில்லை.
அவ்வாறான விடுதிச் சேவை வழங்குநர்கள் YohoBed நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொள்ளும் தனித்துவமான பங்காளித்துவத்தின் மூலம் தங்களது சேவையில் குறிப்பிடத்தக்க தொழிற்பாட்டு மற்றும் தொழில்நுட்ப தரமேம்படுத்தல் வசதிகளைப் பெற்றுக் கொள்கின்றன.
விடுதிச் சேவை வழங்குநர்கள் விருந்தினர்களின் தேவைகள் தொடர்பில் அடிப்படையில் அதிக கவனம் செலுத்தவும், தரமான சேவை வழங்கல் தொடர்பான YohoBed நிறுவனத்தின் நேரடிக் கண்காணிப்பை பெற்றுக் கொள்ளவும் இப் பங்காளித்துவம் வழிவகுக்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
9 hours ago