Johnsan Bastiampillai / 2020 ஒக்டோபர் 14 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச ரீதியில் அங்கிகரிக்கப்பட்டுள்ள உலகளாவிய வங்கி, நிதியியல் மதிப்பாய்வு (Global Banking and Finance Review) இதழால் 2019இல் இலங்கையின் மிகச்சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக, AIA ஸ்ரீ லங்கா கௌரவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கௌரவமிக்க அங்கிகாரமானது, நிதியியற்றுறை, உலகப் பொருளாதாரத்தைப் பகுப்பாய்வு செய்யும் ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஊடக அதிகார மையம் ஒன்றால் முக்கிய செயற்றிறன் குறிகாட்டிகளின் விரிவான மதிப்பீட்டால் அவதானிக்கப்பட்டிருந்தது. இந்த விருதானது, உள்நாட்டு மக்களுக்குச் சேவை வழங்கல், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தல், மிகச்சிறந்த காப்புறுதித் திட்டங்கள், காப்புறுதிச் சேவைகளை வழங்கல் அடிப்படையில் ஆயுள் காப்புறுதித் துறைக்கு AIA ஸ்ரீ லங்காவால் மேற்கொள்ளப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முக்கியமான பங்களிப்புகளுக்கானதொரு சான்றாகும்.
AIA ஸ்ரீ லங்கா, எப்போதும் தனது நிதி வலிமை, ஸ்திரத்தன்மையை உறுதியாகத் தக்கவைத்திருப்பதுடன், அதை வினைத்திறனாகவும் பேணிவருகின்றது. சமீபத்தைய கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலின் போதும், AIA ஸ்ரீ லங்கா மிகவும் உறுதியாகவும் நிலைபேறாகவும் தன்னை நிர்மாணித்திருக்கின்றது என்பதையே நிரூபித்துள்ளது.
இலங்கையினுடைய ஆயுள் காப்புறுதித் துறையின் மிகவும் உயர்வான மூலதன நிறைவு விகிதத்துடன் (CAR) (ஒழுங்குபடுத்துனரால் வேண்டப்படுகின்ற CAR இன் 600 சதவீதத்துக்கும் அதிகமான, 5 மடங்குடன்) அபாயங்களைக் குறைத்து, நெருக்கடியைத் தாங்கக்கூடிய ஒப்பிட இயலாத திறனையும் AIA கொண்டுள்ளது. இது நிறுவனத்தினுடைய விவேகமான முதலீட்டு மூலோபாயம், முதலீடுகளின் உயர்தரம் ஆகியவற்றாலும் பலப்படுத்தப்படுகின்றது.
AIA ஸ்ரீ லங்கா எப்போதும் வாடிக்கையாளரை மகிழ்விப்பதையே நோக்காகக் கொண்டுள்ளது. அதாவது, நிறுவனம் கடந்த 30 வருடங்களாக காப்புறுதிதாரர்களின் பங்குலாபங்களின் வாக்குறுதியளிக்கப்பட்ட விகிதத்ைத விடச் சிறந்த விகிதங்களையே அவர்களுக்கு வழங்கியமைக்கான கடந்த காலச் சாதனைகளுடன், வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதில் தொடர்ந்தும் முன்னேற்றகரமான போக்கையே கொண்டிருக்கின்றது. நிறுவனத்தினுடைய முன்னோடியான டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகள், வியாபாரத்தை இலகுவாக மேற்கொள்வதில் கவனம் செலுத்தல் நடவடிக்கைகள் போன்றன நிஜமான வாடிக்கையாளர் நோக்கத்தை நிறைவுசெய்கின்ற காப்புறுதி வழங்குநராகத் திகழ்வதில் தனது நற்பெயரை மேலும் ஸ்திரப்படுத்தி இருக்கிறது.
ஆறாவது முறையாக சாதனை படைத்த AIA
AIA குழும லிமிெடட், தொடர்ச்சியாக ஆறாவது வருடமாகவும் மிகவும் அதிக எண்ணிக்கையான மில்லியன் டொலர் வட்ட மேசை (MDRT) உறுப்பினர்களைக் கொண்டுள்ள உலகின் ஒரேயொரு பல்தேசிய நிறுவனம் என்ற வரலாற்றுச் சாதனையை அறிவித்திருக்கின்றது.

2020 ஜுலை 01ஆம் திகதியின்படி MDRT உறுப்பினர்களாக மொத்தமாக 12,796 AIA முகவர்களும், முகவர் நிறுவனத் தலைவர்களும் பதிவு செய்திருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
MDRT ஆயுள் காப்புறுதி, நிதிச் சேவைகள் வியாபாரத்தில் அதிசிறந்த தரத்துக்காக சர்வதேச ரீதியில் அங்கிகரிக்கப்பட்டுள்ள உலகளாவிய, சுயாதீனமான ஓர் அமைப்பாகும்.
இதனுடைய உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட உயர் மட்டக் கட்டுப்பணம், தரகுப் பணம், வருவாயை ஏற்படுத்துமாறும், அத்துடன் அதிசிறப்பான தொழில் ரீதியான அறிவு, கண்டிப்பான நெறிமுறைசார் நடத்தை, மிகச்சிறந்த வாடிக்கையாளர் சேவையை நிரூபிக்குமாறும் வேண்டப்படுகின்றனர்.
8 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Nov 2025