2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

இலங்கையின் முதலாவது டெங்கு காப்புறுதித்திட்டம் அறிமுகம்

Editorial   / 2017 செப்டெம்பர் 07 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாட்டில் அண்மையில் டெங்கு நோய் வேகமாகப் பரவியிருந்ததைத் தொடர்ந்து, Fairfirst இன்சூரன்ஸ், பிரத்தியேகமான டெங்கு காப்புறுதித்திட்டமொன்றை, சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இது, காப்புறுதித் துறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள முதலாவது திட்டம் என்பதுடன், டெங்கு காய்ச்சல் காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்க நேரிடும் நிலையில், மக்களுக்கான பாதுகாப்புக் கவசமாக, இந்தத் திட்டம் அமைந்திருக்கும். 

இலங்கையில் மருத்துவ காப்புறுதித்தீர்வுகளை வழங்குவதில் ஒப்பற்ற முன்னோடியாக Fairfirst திகழ்கிறது. Fairfirst மருத்துவ அணியின் அர்ப்பணிப்பான செயற்பாடாக இது அமைந்துள்ளதுடன், அண்மையில் நடைபெற்ற காப்புறுதித்துறை விருதுகள் வழங்கும் நிகழ்வின் போது, Fintelekt இனால் மருத்துவக் காப்புறுதிக்கான அதிசிறந்த விருதை வெற்றியீட்டியது. 2016இல், இந்த விருதை Fairfirst வென்றிருந்தது. எனவே, இந்த விருதை இரண்டாவது தடவையாக, நடப்பு ஆண்டில் தன்னகப்படுத்தியது. 

Fairfirst டெங்குத் திட்டம், டெங்குக் காய்ச்சல் காரணமாக மேற்கொள்ளப்படும் சகல வைத்தியசாலை செலவுகளையும் ஈடுசெய்வதாக அமைந்துள்ளதுடன், அரச வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுவதற்கான நாளாந்தக் கொடுப்பனவொன்றை வழங்கும் வகையிலும் அமைந்துள்ளது. பணமின்றிய வசதி, வயது வித்தியாசமற்ற நிலையான தவணைக்கட்டணம், வாழ்நாள் முழுவதற்குமானப் புதுப்பிப்பு,  காப்புறுதி செய்தவரின் குடும்ப அங்கத்தவர்களுக்கானக் காப்பீடுகள் நீடிப்பு போன்ற அம்சங்களை இந்தத்திட்டம் கொண்டுள்ளது. 

கூட்டாண்மை நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் தனிநபர்களுக்கு காப்புறுதிகளை வழங்கும் Fairfirst, நாட்டில் காணப்படும் முன்னணி பொதுக்காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. உலகில் காணப்படும் மாபெரும் சொத்துகள்,  இடர் காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றான Fairfax நிறுவனத்தின் பின்புலத்துடன் இயங்கி வருகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .