2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

இலங்கையின் முதல் தேசிய AI கண்காட்சி மற்றும் மாநாடு

Freelancer   / 2025 ஓகஸ்ட் 25 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் டிஜிட்டல் முன்னேற்றத்தில் மாற்றத்திற்கான தளத்தை அமைப்பதற்காக, 2025 செப்டம்பர் 29–30 திகதிகளில் நடைபெறவுள்ள முதலாவது தேசிய AI கண்காட்சி மற்றும் மாநாட்டை அறிமுகப்படுத்தி, ஒரு புதிய யுகம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் முன்னணி செயற்கை நுண்ணறிவு மையமாக இலங்கையை நிலைநிறுத்துவதற்கான நாட்டின் முயற்சியாக அமையவுள்ள இந்த முன்னோடியான நிகழ்வு, AI பயன்பாட்டை அனைத்து பொருளாதார துறைகளிலும் விரைவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய AI கண்காட்சி மற்றும் மாநாடு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த எதிர்கால நோக்கில் இலங்கையின் பயணத்தை முன்னெடுக்க உருவாக்கப்பட்ட ஒரு முக்கியமான தேசிய தளமாக இருக்கும். 2025 ஆம் ஆண்டில் சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்படும் நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை, 2030 ஆம் ஆண்டிற்குள் 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாக விரிவாக்குவது எனும் மூலோபாயக் கண்ணோட்டத்துக்கு இது நேரடி ஆதரவை வழங்குவதாக அமையும். இந்த வளர்ச்சி பாதையில், AI இன் பங்களிப்பு 10 முதல் 12 சதவீதம் வரை அமைந்திருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால், இலங்கையின் பொருளாதார மாற்றத்தின் முக்கிய அடித்தளமாக AI அமையும்.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் SLT-MOBITEL ஆகியவற்றின் வரலாற்றுச் சிறப்புமிக்க மூன்று தரப்புக் கூட்டாண்மை, நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தை மேம்படுத்த அவை காண்பிக்கும் அர்ப்பணிப்பான ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. SLASSCOM இன் பங்களிப்புடன் இந்த கைகோர்ப்புக்கு மேலும் வலிமை சேர்க்கப்பட்டுள்ளது. நிகழ்வின் Ecosystem பங்காளராக SLASSCOM மற்றும் தொழில்னுட்பப் பங்காளராக Huawei ஆகியன இணைந்துள்ளதனூடாக, இலங்கையின் டிஜிட்டல் வெளியில் வளர்ச்சியை தூண்டுவதில் காண்பிக்கும் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டமைப்பு, இலங்கையின் விரிவான டிஜிட்டல் பொருளாதார இலக்குகள் மற்றும் நாட்டை பிராந்தியத் தொழில்நுட்ப முன்னோடியாக உருவாக்கும் நீண்டகாலக் கண்ணோட்டத்துடன் சிறப்பாக ஒத்திசைவாக உள்ளது. இதன் மூலம் அனைவரும் சமமாக பயனடையக்கூடிய உள்ளடக்கிய வளர்ச்சி, நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைவதை உறுதிசெய்யும்.

இரு நாட்கள் நடைபெறவுள்ள இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு, SLT-MOBITEL நிறுவனத்தின் ஆதரவுடன், உலகத் தரத்திலான நவீன தொழில்நுட்பங்களை உள்ளூர் தொழில் துறைகளுக்கு கொண்டு வரும். இது, இலங்கையின் தொழில்நுட்ப எதிர்காலத்தை வடிவமைக்கும் AI புத்தாக்கங்களுக்கு, வணிக நிறுவனங்கள், நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிலான அணுகலை வழங்கும். இந்த மாநாடு, இலங்கையின் AI பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பான AI ஆட்சி, நம்பிக்கை மற்றும் ஒழுக்கம், நடைமுறைப்படுத்தும் சவால்கள், வங்கித் துறை மற்றும் நிதி சேவைகள், சுகாதாரம், கல்வி, வேளாண்மை, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் போன்ற துறைகளில் துறைசார்ந்த பயன்பாடுகள் போன்ற அத்தியாவசிய தலைப்புகளை விவாதிக்கும்.

SLT-MOBITEL இன் தவிசாளர் கலாநிதி. மோதிலால் டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் தேசிய தகவல் தொடர்பாடல் தொழினுட்ப தீர்வுகள் வழங்குனர் எனும் வகையில் SLT-MOBITEL, AI இன் ஆற்றலை நன்கு உணர்ந்துள்ளது. நாட்டின் டிஜிட்டல் எதிர்காலத்தை வழிநடத்துவது எமது பொறுப்பாக அமைந்துள்ளது. நாடு முழுவதிலும் ஏற்கனவே நாம் SLT-MOBITEL இன் சொந்த புத்தாக்கங்களான Hello AI மற்றும் AI Pazz போன்றவற்றினூடாக AI ஒருங்கிணைப்பை நாம் மேம்படுத்திய வண்ணமுள்ளோம். அதனூடாக, தினசரி வாழ்க்கை மற்றும் வியாபார செயற்பாடுகளை ஸ்மார்ட்டான தொழினுட்பங்கள் எவ்வாறு மேம்படுத்தும் என்பதை வெளிப்படுத்தி வருகிறோம். தேசிய AI கண்காட்சி மற்றும் மாநாட்டினூடாக, சகல சமூகங்களையும் சேர்ந்த ஒவ்வொரு இலங்கையருக்கும் AI புரட்சியில் பங்கேற்று அதன் பலனை அனுபவிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு எம்மை அர்ப்பணித்துள்ளோம்.” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .