Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஓகஸ்ட் 25 , மு.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சி, மெத்தை தொழினுட்ப நிறுவனமான Englander International உடன் இணைந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற மெத்தைகளை இலங்கை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அதற்காக இல. 69, ஹைட் பார்க் கோனர், கொழும்பு-02 இல் புதிய Englander காட்சியறையை திறந்துள்ளது.
இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் பங்கேற்றதுடன், Englander International இன் தலைவர் லூ பேஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். வாடிக்கையாளர்களுக்கு நவீன புத்தாக்கம், சௌகரியம் மற்றும் சிறந்த வடிவமைப்பு ஆகியவற்றை பெற்றுக் கொடுப்பதற்கான ரிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் அர்ப்பணிப்பை இந்த காட்சியறை மீள உறுதி செய்துள்ளது. இலங்கையில் Englander மெத்தை வகைகளை உற்பத்தி செய்வதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ள இந்தக் குழுமத்துக்கு, நவீன ஹயிபிரிட் தொழினுட்பங்களைப் பயன்படுத்தி, memory foam முதல் latex மற்றும் Inner Spring ஆகியவற்றைக் கொண்டு உயர் தர மெத்தைகளை தயாரித்து வழங்கக்கூடியதாக இருக்கிறது.
1894 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Englander International தொடர்ச்சியாக விசேடத்துவம் வாய்ந்த உறங்கல்சார் தயாரிப்பு தீர்வுகளை தயாரித்து விநியோகிக்கிறது. சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதுடன், நிலைபேறான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் Englander மெத்தைகள், சிறந்த சௌகரியம் மற்றும் மேம்படுத்தப்பட்ட குளிர்மைத் தன்மையை வழங்குவதுடன், நவீன ஆய்வுகளையும், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பையும் ஒன்றிணைத்து பிரத்தியேகமான உறங்கல் அனுபவங்களை வழங்கிய வண்ணமுள்ளது. உயர் தரம் வாய்ந்த உறங்கல் தீர்வுகளை விநியோகிப்பதில் கவனம் செலுத்தும் Englander மெத்தைகள், நீடித்த உழைப்பு, சிறந்த வடிவமைப்பு மற்றும் thermal comfort தொழினுட்பத்தையும் கொண்டுள்ளதால், எந்தவொரு நபருக்கும் புத்துணர்வான உறக்க அனுபவத்தை வழங்கும்.
இலங்கையில் Englander இன் பிரவேசம் தொடர்பில் Englander International இன் தலைவர் லூ பேஜ் குறிப்பிடுகையில், “எமது நோக்கத்தினூடாக எமது செயற்பாடுகள் வலுவூட்டப்படுவதுடன், அதனூடாக நவீன வினைத்திறனைக் கொண்ட தயாரிப்புகள் உருவாக்கப்படுகின்றன. பெருமளவான மக்களுக்கு இயலுமானவரை நுணுக்கமான ரீதியில் வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளை வழங்கி எமது நீண்ட பயணத்தை தொடர முடிந்துள்ளது. இலங்கையில் எமது புதிய காட்சியறையினூடாக, எமது பயணத்தில் புதிய அத்தியாயம் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்துக்காக எமது புகழ்பெற்ற நாமத்தினூடாக சிறந்த உறக்க அனுபவங்களை ஏற்படுத்திக் கொடுக்க எதிர்பார்க்கிறோம்.” என்றார்.
ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சியின் பணிப்பாளர் சபை இயக்குனர் ஷிரோன் குணரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “Englander International உடன் கைகோர்த்து, எமது வாடிக்கையாளர்களுக்கு எதிர்கால வாய்ப்புகளை எய்துவதற்கு அவசியமான வலுவூட்டலை பெற்றுக் கொடுக்கும் சிறந்த உறக்கம் மற்றும் ஓய்வை வழங்கும் எமது முயற்சியின் விரிவாக்கமாக Englander International உடனான எமது செயற்பாடுகள் அமைந்துள்ளன. எமது தவிசாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி/முகாமைத்துவ பணிப்பாளரான கலாநிதி. சேன யத்தெஹிகே அவர்களின் மூலோபாய வழிகாட்டலினூடாக வழிநடத்தப்படும் நாம், இலங்கையில் உலகத் தரம் வாய்ந்த உறங்கல்சார் தொழினுட்பத்தை அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறோம். புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழினுட்பங்களினூடாக உள்நாட்டு சந்தையை மேலும் நவீன மயப்படுத்தி, சிறந்த உறக்கம், ஆரோக்கியம் மற்றும் சௌகரியத்தை மேம்படுத்துகிறோம்.” என்றார்.
2 hours ago
29 Aug 2025
29 Aug 2025
29 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
29 Aug 2025
29 Aug 2025
29 Aug 2025