2025 ஜூலை 23, புதன்கிழமை

இலங்கையில் மருந்துப் பொருட்கள் உற்பத்தி வலயம்

Editorial   / 2018 ஜனவரி 18 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை மாவட்டத்தின் வெலிபென்ன பகுதியில் இலங்கையின் முதலாவது மருந்துப்பொருட்கள் உற்பத்தி வலயமொன்றை நிறுவ அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மற்றும் பார்மா சோன் பிரைவட் லிமிட்டெட் ஆகியன முன்வந்துள்ளன. இதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.  

இதன் பிரகாரம் உள்நாட்டில் மருந்துப்பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அவசியமான காணியை பெற்றுக்கொடுத்தல் மற்றும் மருந்துப்பொருட்கள் உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் நடவடிக்கைகளை பார்மா சோன் பிரைவட் லிமிட்டெட் முன்னெடுக்கும்.  

இலங்கை முதலீட்டு சபையின் அனுமதியுடன் இயங்கும் நிறுவனமாக பார்மா சோன் திகழ்வதுடன், மலேசியாவின் தொழில்முயற்சியாளர்களால் இந்நிறுவனத்தின் செயற்பாடுகள் மேற்பார்வை செய்யப்படுகின்றன.  

இந்த வலயத்தின் மூலமாக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான மருந்துப்பொருட்கள் உற்பத்தியை உள்நாட்டில் மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .