Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜூலை 31 , மு.ப. 03:56 - 1 - {{hitsCtrl.values.hits}}
தேசிய அலைப்பேசி சேவை வழங்குநரான SLT மொபிடெல் கண் மற்றும் உடல் உறுப்பு தானம் செய்ய விரும்பும் எந்தவொரு நபருக்கும் இத்திட்டத்தில் இணைந்துகொள்ளக் கூடிய வகையில் கண் தானம் வழங்கும் மத்திய நிலையம் மற்றும் தேசிய திசு வங்கியுடன் இலகுவாகப் பதிவு செய்யும் தொழில்நுட்பமுறையினை அறிமுகம் செய்துள்ளது.
மொபைல் தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த தொழில்நுட்பத்தின் மூலம் 6060 எனும் இலக்கத்துக்கு அழைப்பினை மேற்கொள்ளுதல் அல்லது SMS ஒன்றை அனுப்புதல் அல்லது இணையத்தளத்தின்மூலமாகவோ தங்களை பதிவு செய்துகொள்ள முடியும்.
இந்த தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் நிகழ்வு, அண்மையில் ஸ்ரீ லங்கா டெலிகொம் மொபிடெல் நிறுவனத்தின் தலைவர்பி.ஜி.குமாரசிங்க, இலங்கை கண் தானம் செய்வதற்கான மத்திய நிலையத்தின் தலைவர் டி.சி.ரணசிங்க ஆகியோரின் தலைமைத்துவத்தின் கீழ் இடம்பெற்றது. 6060 எனும் இலக்கத்தை இத்திட்டத்துக்காக அறிமுகப்படுத்துவதுடன், வாடிக்கையாளர்கள் இலகுவாக இணையத்தளத்தின் மூலம் பதிவு செய்வதற்காக அனுமதி பத்திரத்தைப் பெற்று கொள்வதற்கான அனுசரணையையும் மொபிடெல் வழங்கியுள்ளது.
31 minute ago
2 hours ago
3 hours ago
தமிழ்மணி Saturday, 29 December 2018 04:59 PM
நான் இறக்கும் தருவாயில். எனது உடல் முழுவதும் தானம் செய்ய விரும்புகிறேன்.
Reply : 0 1
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
3 hours ago