Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 18 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதிக வேலைப்பளு கொண்ட அனைவருக்கும் அவர்களின் ஆடைகளை மிக எளிமையாக சலவை செய்திடும் வகையில், இலங்கையில் முதல் முறையாக WiFi மூலம் செயல்படுத்தக்கூடிய LG WiFi இன்வேர்டர் சலவை இயந்திரத்தை அபான்ஸ் அறிமுகம் செய்துள்ளது.
ஆடைகளைச் சலவை செய்யும் பணி அனைவருக்கும் சுமை நிறைந்த ஒரு காரியமாகும். ஆனால், இப்போது எந்த அசௌகரியமும் இல்லாமல், மிகவும் எளிமையாக, குறைந்த மின் செலவில் இருக்கும் இடத்திலிருந்தே, WiFi மூலம் ஆடைகளை மிக எளிமையாகச் சலவை செய்திட முடியும்.
LG WiFi இன்வேர்டர் சலவை இயந்திரம் LG Smart Thinq சிறப்பம்சத்தைக் கொண்டுள்ளது. Google Play அல்லது Apple App Store இன் மூலம் உங்கள் திறன்பேசியினூடாக மிகவும் எளிமையாக இதன் App ஐ பதிவிறக்கம் செய்து, WiFi வசதியுடன் உங்கள் சலவை இயந்திரத்தை இயக்குவதற்கான வசதி உள்ளது.
இதை இயக்குவதற்கு, சலவை செய்யவேண்டிய ஆடைகளை சலவை இயந்திரத்துக்குள் இட்டு, Remote Start பொத்தானை அழுத்துவது மாத்திரமே.
அலுவலகத்துக்குச் செல்லும் முன், கடைத்தொகுதிகளுக்குச் செல்லும் முன் அல்லது வேறு ஏதேனும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் சந்தர்ப்பங்களில் திறன்பேசியிலிருந்து Smart Thinq App இல் Start Tap செய்து, எத்தனை முறை சலவை செய்யவேண்டும் என்பதனை தெரிவுசெய்து, செயல்பாட்டை இயக்குவது மாத்திரமேயாகும்.
அதேபோல், LG வொஷர் ட்ரயரில் எத்தனைமுறை உலர்த்தவேண்டும் என்பதைத் தெரிவுசெய்யும் சிறப்பம்சம் உள்ளதால் பெறுமதியான நேரத்தைச் சேமித்துக்கொள்ளவும் முடியும்.
Smart Thinq App இல் Smart Diagnosis சிறப்பம்சங்களைக் காணக்கூடியதாக உள்ளதோடு, சிறு தொழில்நுட்பக் கோளாறையும் தொழில்நுட்ப வல்லுநரின் உதவி இல்லாமல் APP மூலம் சரிசெய்திட முடியும்.
அதேபோல், நீங்கள் எத்தனை முறைகள் சலவை செய்கின்றீர்கள் என்பதற்கமைவாக உங்கள் மின்சாரச் செலவை இந்த APP மூலம் அவதானிக்க முடியும்.
Smart Thinq தொழில்நுட்பத்துடன் நவீன இன்வேர்டர் டிரெக்ட் டிரைவ் தொழில்நுட்பத்தை இங்கு காணமுடியும்.
இதன் மூலம் அதிக செயற்திறனுடன் அதிக மின்சாரத்தைச் சேமித்துக் கொள்ள முடியும்.
அத்தோடு இதன் மோட்டருக்கு 10 வருடகால சர்வதேச உத்தரவாதம் வழங்கப்படுவதோடு, நீண்ட காலத்துக்கு அதிக செயற்திறனுடன் இயங்கும்.
இதன் மோட்டருக்கு 10 வருடகால சர்வதேச உத்தரவாதம் வழங்கப்படுவதோடு, நீண்ட காலத்துக்கு அதிக செயல்திறனுடன் செயல்படுகின்றது.
மாறுபட்ட ஆறு அசைவுகள் மூலம் துணிகளின் தன்மைக்கு மற்றும் அளவுகளுக்கு ஏற்ப சலவை செய்கிறது.
6 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago