2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

என்வோய் இலண்டனின்வர்த்தக நாமத்தூதுவர் இலங்கை விஜயம்

Editorial   / 2017 செப்டெம்பர் 07 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

டோர்சட் போர்ன்மவுத்தைச் சேர்ந்த 28 வயதான மொடலும் தனிப்பட்ட பயிற்சியாளருமான ஜெக் ஐயர்ஸ், கடந்த மாதம் பேர்மிங்கமில் நடைபெற்ற மிஸ்டர் வேர்ல்டின் ஆரம்பமாகவுள்ள கௌரவமிக்க மிஸ்டர் இங்கிலாந்து பட்டத்தைப் பெற்றுக்கொண்ட முதலாவது, உடலுறுப்புத் துண்டிக்கப்பட்ட ஒருவராக உள்ளார். 

இந்தக் கவர்ச்சிகரமான நிகழ்வானது, 22 இறுதிச்சுற்று போட்டியாளர்களிடையேயான மூளை மற்றும் உடல் வலிமைக்கிடையிலான போட்டியாக இருந்ததுடன், பிரித்தானிய சமூகத்தின் பெஷன் பெருமகன்கள் மற்றும் அதிசிறப்பானவர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது. இதனை 14 ஜுலை 2017 அன்று, இங்கிலாந்து முழுவதும், பலர் கண்டு களித்தனர். 

இலங்கையில் உயர்தரம்மிக்க ஆண்கள் ஆடையாக தன்னை நிலை நாட்டியுள்ள என்வோய் லண்டன், இரண்டாவது தொடர்ச்சியான ஆண்டாகவும் மிஸ்டர் இங்கிலாந்து 2017இன் பிரதான உடை பங்காளியாக திகழ்ந்தது. 

“இலங்கை போன்ற சிறிய நாட்டிலுள்ள ஒரு குறியீடானது, சர்வதேசச் சந்தையில் நுழைந்து, இதுபோன்ற சர்வதேச கௌரவமிக்க நிகழ்வில் உத்தியோகபூர்வ உடை பங்காளியாக திகழ்வதையிட்டு நாம் பெருமையடைகிறோம். யாரும் எதிர்பாராத வகையில் இந்த உயர் போட்டியுடைய நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற முதலாவது உடலுறுப்பு துண்டிக்கப்பட்ட நபராக உள்ள ஜெக் ஐயர்ஸ்ஸை குறித்து பரந்த நோக்கத்தை உருவாக்குவதையிட்டு நாம் மிகவும் சிலிர்ப்புடன் உள்ளோம். இந்தப் பட்டத்தை வெற்றி பெற்றதன் மூலம் செய்ய முடியாதக் காரியத்தை அவர் சாதித்துக்காட்டியுள்ளதுடன், இதுபோன்று உலகம் முழுவதும் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் உதாரணமாக திகழ்கின்றார். கொழும்பிலுள்ள என்வோய் மென்சனில் அவரை விரைவில் வரவேற்க நாம் எதிர்பார்க்கிறோம்” என என்வோய் இலண்டன் குறியீட்டை உருவாக்கியவரும் பெஷன் தொலைநோக்காளருமான ஃபௌசுல் ஹமீட் தெரிவித்தார். 

“மிஸ்டர் இங்கிலாந்தின் வெற்றியாளராக, மிகவும் பரந்த ஆண்கள் ஆடைத் தெரிவைக் கொண்ட என்வோய் இலண்டன் போன்ற உலகத்தரம்வாய்ந்த குறியீட்டுடன் இணைந்து அடையாளப்படுத்தப்படுவதை நான் கௌரவமாக கருதுகின்றேன். சொர்கத்தீவான இலங்கைக்கு விஜயம் செய்து என்வோய் இலண்டனுடன் இணைந்து செயற்பட எதிர்பார்க்கிறேன்” என ஐயர்ஸ் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .