S.Sekar / 2022 ஏப்ரல் 11 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எயார்டெல் லங்கா, மீண்டும் தேசிய வர்த்தக சிறப்பு விருது வழங்கும் நிகழ்வில் (NBEA) அங்கிகாரத்தைப் பெற்றுள்ளது.

இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தால் (NCCSL) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருது வழங்கும் நிகழ்வில் எயார்டெல் நிறுவனத்திற்கு ‘பிற சேவைகள்/பிற துறைகள்’ (Other Services / Other Sectors) பிரிவில் மெரிட் விருது வழங்கப்பட்டது. புத்தாக்கமான மற்றும் பலனளிக்கும் வாடிக்கையாளர் அனுபவங்களை உருவாக்கும் அதே வேளையில், நாடு முழுவதும் டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்துவதில் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தொடர்ச்சியான முதலீடுகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றி குறித்து எயார்டெல் லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் அஷீஷ் சந்திரா கருத்துத் தெரிவிக்கையில், “இத்தகைய சிறப்புமிக்க நிறுவனங்களின் மத்தியில் அங்கிகாரம் பெறுவது ஒரு கௌரவமாகும். கடந்த ஆண்டு வணிகத்தின் அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்குவதற்கான மதிப்பின் ஒரு பாடமாக இது அமைந்துள்ளது. சவாலான காலகட்டத்தை நாம் எதிர்கொள்ளும் அதேவேளையில், இலங்கையின் ஆற்றலை நாங்கள் தொடர்ந்து நம்பி வருகிறோம், மேலும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் மதிப்பை உருவாக்குவதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.” என தெரிவித்தார்.
இதற்கு முன்னரும் எயார்டெல் இதே பிரிவில் 2019இல் விருதினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. NBEA என்பது இலங்கையின் தேசிய வர்த்தக சம்மேளனத்தால் ஆரம்பிக்கப்பட்ட விருது வழங்கும் நிகழ்வுகளில் ஒன்றாகும். இலங்கையில் சிறந்த கூட்டுத்தாபனத்தில் சிறந்த வர்த்தகங்களை அங்கிகரிக்கும் முதன்மையான தேசிய தளமாக இது ஒரு வலுவான நற்பெயரைப் பேணி வந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
29 minute ago
36 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
36 minute ago
41 minute ago
2 hours ago