Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 25 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெய்லி மிரர், லங்காதீப மற்றும் தமிழ்மிரர் ஆகிய பத்திரிகைகளின் இணையப்பதிப்பை இலவசமாக ‘எயார்டெல்’ வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளும் வகையில், எயார்டெல் லங்கா மற்றும் விஜய பத்திரிகை நிறுவனத்தின் அங்கமான விஜய டிஜிட்டல் மீடியா பிரிவு ஆகியன கைகோர்த்துள்ளன.
இலங்கையில் அதிகமான வாசகர்களைக் கொண்டுள்ள பத்திரிகைகளின் இணையப்பதிப்பை, எந்தவிதமான தரவு (data) செலவுகளுமின்றி, இலங்கையில் முதன்முறையாகத் தற்போது பெற்றுக்கொள்ள முடிகின்றது.
எயார்டெல் வாடிக்கையாளர்கள் எந்த இடத்திலிருந்தாலும், செய்திகளையே கூடுதலாக வாசித்து அறிந்துகொள்ள விரும்புகின்றனர். இந்தக் கைகோர்ப்பின் மூலமாக, எயார்டெல் லங்கா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்குச் சுடச்சுடச் செய்திகளை வழங்க முடிகிறது.
விஜய டிஜிட்டல் மீடியா பிரிவின் பணிப்பாளரான உதேஷ் குணதுங்க, கூறுகையில், “இணையத்தின் மூலமான எமது வாசகர்களைப் பொறுத்தவரையில், இணையத்தின் வேகத்துக்கு அவர்கள் முன்னுரிமையளிப்பதால், எயார்டெல் உடன் பங்காளராக இணைவது எமக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. எயார்டெல்லின் இணைய வேகம், எமது வாசகர்களுக்கு மிகச் சிறந்த அனுபவத்தை வழங்கும் என நாம் நம்புகின்றோம்” என்று குறிப்பிட்டார்.
எயார்டெல் லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான ஜினேஷ் ஹெக்டே குறிப்பிடும்போது, “இளம் வாசகர்கள், இணையத்தின் மூலமாகவே செய்திகளை அறிந்து கொள்ள விரும்புகின்றனர். வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கு, இத்தகைய தொழிற்துறைப் பங்குடமைகளை நாம் ஏற்படுத்திக் கொள்கின்றமைக்கு அதுவே காரணம். எமது வாடிக்கையாளர்களுக்குப் பெறுமதியைச் சேர்ப்பிப்பதற்கு, விஜய போன்ற நம்பகமான பத்திரிகையுடன் பங்காளராக இணைவது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது” என்றார்.
விஜய நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் விஜய டிஜிட்டல் மீடியா பிரிவின் பணிப்பாளருமான உதேஷ் குணதுங்க மற்றும் எயார்டெல் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ஜினேஷ் ஹெக்டே ஆகியோர் கைலாகு கொடுப்பதையும் அருகில் விஜய நியூஸ் பேப்பர்ஸ் மற்றும் எயார்டெல் நிறுவனங்களின் அதிகாரிகளையும் காணலாம்.
24 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
2 hours ago