Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 பெப்ரவரி 18 , பி.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எலிபன்ட் ஹவுஸ் லெமனேட் ஏற்பாடு செய்திருந்த 15ஆவது வருடாந்த ‘எலிபன்ட் ஹவுஸ் லெமனேட்’ கிண்ண (MCA ‘D’ பிரிவு) 40 ஓவர் போட்டித்தொடர் கடந்த வார இறுதியில் ஆரம்பமாகியிருந்தது.
ஜோன் கீல்ஸ் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமும், எலிபன்ட் ஹவுஸ் வர்த்தக நாமத்தின் உரிமையாண்மையை தன்வசம் கொண்டுள்ள, சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் பிஎல்சியின் அனுசரணையில் 2003ஆம் ஆண்டு முதல் இந்த MCA (Mercantile Cricket Association) போட்டித்தொடர் ஏற்பாடு செய்யப்படுகிறது.
‘எலிபன்ட் ஹவுஸ் லெமனேட்’ கிண்ணம் (MCA ‘D’ பிரிவு) 40 ஓவர் போட்டித்தொடரில் 14 அணிகள் உள்ளடங்கியுள்ளன.
2018 ஜனவரி 27 மற்றும் 28ஆம் திகதிகளில் முதல் சுற்றுப்போட்டிகள் நடைபெற்றிருந்ததுடன், மேலும் இரு சுற்றுகள், லீக் போட்டிகள் மற்றும் நொக்அவுட் போட்டிகள் போன்றன நடைபெறவுள்ளன. லீக் போட்டிகளில் 42 போட்டிகள் அடங்கியிருக்கும், இது 2018 மார்ச் 14ஆம் திகதி வரை நடைபெறும். நொக்அவுட் போட்டிகளில் ஏழு போட்டிகள் நடைபெறும் என்பதுடன், அவை MCA மைதானத்தில் மார்ச் 17ஆம் திகதி (காலிறுதி), மார்ச் 24 (அரையிறுதி) மற்றும் ஏப்ரல் 1 (இறுதி) போன்ற தினங்களில் நடைபெறும்.
‘எலிபன்ட் ஹவுஸ் லெமனேட்’ கிண்ணத்துக்கு மேலதிகமாக, சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த பந்து வீச்சாளர், போட்டித்தொடரின் நாயகன் மற்றும் இறுதிப்போட்டியின் நாயகன் போன்ற விருதுகளையும் எலிபன்ட் ஹவுஸ் வழங்கவுள்ளது.
இந்தப் போட்டித்தொடருக்கு அனுசரணை வழங்குவது தொடர்பில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் உப தலைவரும், எலிபன்ட் ஹவுஸ் பானங்களுக்கான தலைமை அதிகாரியுமான பெலிந்திர வீரசிங்க கருத்துத்தெரிவிக்கையில், “15ஆவது ஆண்டாகவும் இந்த முறை ‘எலிபன்ட் ஹவுஸ் லெமனேட் கிண்ணம்’ வழங்குவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கையில் வர்த்தக கிரிக்கெட் விளையாட்டுடன் நாம் நீண்ட காலமாகப் பேணி வரும் உறவை இதனூடாக மேலும் வலுப்படுத்தியுள்ளோம்” என்றார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago