Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அதிரன்
நீர்த்தட்டுப்பாடு, யானைப் பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றை, ஒரு போராட்டமாக எடுத்துக் கொண்டு ஏற்றுமதிக் கிராமங்களை உருவாக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் தெரிவித்தார்.
ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கறுவா அறுவடை விழா இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்தின் தலைமையில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் தாந்தாமலை - ரெட்பானா கிராமத்தில் நடைபெற்றது.
இங்கு உரையாற்றும்போதே மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“கனவாக இருந்த ஒரு ஏற்றுமதிப் பயிரை எமது மாவட்டத்தில் பயிரிட்டு அறுவடை செய்வதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். கிராமத்தினுடைய விவசாயிகளாகிய மக்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல. நாங்கள் அறிவுரைகள் வழங்குகின்ற பட்சத்தில் அதற்குச்செயல் வடிவம் கொடுக்கின்றவர்கள். ஆகவே இவ்வாறான ஒரு நிகழ்வு நிறைவேறியிருப்பது பெருமிதமான விடயம்.
“குறிப்பாக நெல் தவிர்த்து, ஏற்றுமதிப் பயிர்களும், உப உணவுப் பயிர்கள், பாரம்பரியமான மரக்கறி வகைகளுக்கு சர்வதேச ரீதியான கிராக்கி உள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்து வாழுகின்ற எமது மக்களே ஏற்றுமதிக்காகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
“சாதாரணமாகக் குறிப்பிட்டால் எமது பிரதேசத்தில் முரங்கை இலை,கருவேப்பிரை என அனைத்துப் பொருள்களையும் ஏற்றுமதி செய்யக்கூடிய ஒரு நிலை இருக்கிறது. அந்த வகையில் நிறையவும் சந்தை வாப்புக்கள் இருக்கின்றன.
“ஆகவே விவசாயிகளாகிய நாங்கள் இந்தப்பிரதேசத்தின் வளத்தின் உச்ச பயனை பெற்றக்கொள்ளும் முகமாக குறிப்பாக நீர்த்தட்டுப்பாடு, யானைப் பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றினை ஒரு போராட்டமாக எடுத்துக் கொண்டு ஏற்றுமதிக் கிராமமாக மாற்ற வேண்டும் என்பது மாவட்ட உத்தியோகத்தர்கள் அனைவரதும் நோக்கமாக இருக்கிறது” என்று அவர் மேலும் கூறினார்.
40 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
47 minute ago
1 hours ago