2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

ஐ.டி.எச் இல் ஆய்வகத்தை நிறுவத் தனியார் துறை உதவி

Editorial   / 2020 ஜூன் 12 , பி.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தில் (ஐ.டி.எச்) மூலக்கூறு கண்டறியும் ஆய்வகம் ஒன்றை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜசிங்க அண்மையில் திறந்து வைத்தார்.

மெல்ஸ்டாகோர்ப் பி.எல்.சி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி, டொச் வங்கி (Deutsche Bank), தெற்காசிய கேட்வே டெர்மினல்கள் (பிரைவேட்) லிமிடெட் (South Asia Gateway Terminals (Pvt) Ltd), இலங்கை மீன்வளக் கழகத்தின் நலன்புரி சங்கம், திறப்பு விழாவில் பிரதிநிதித்துவம் வகித்த ஷம்மி சில்வா போன்ற தனியார் துறை நன்கொடையாளர்களால் இப்பணி ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட்-19 பரவலைத் தொடர்ந்து, இலங்கையின் பரிசோதனைத் திறனை அதிகரிக்க வேண்டும் என்ற, அவசரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, இந்த ஆய்வகம் நிறுவப்பட்டது.

ஐ.டி.எச் இல் நிறுவப்பட்டுள்ள மூலக்கூறு கண்டறியும் ஆய்வகமானது, பரிசோதனைத் திறனை எளிதாக்கியுள்ளதுடன் பரிசோதனை நேரத்தைக் குறைத்து, ஐ.டி.எச் க்குள் பரிசோதனைகளை மேற்கொள்ள உதவுகின்றது. ஐ.டி.எச் இல் சிகிச்சை பெறும் நோயாளிகளின் மருத்துவப் பராமரிப்புகளையும் இப்பரிசோதனை மேம்படுத்துகிறது. எதிர்மறையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர்களை உடனடியாக வெளியேற்ற உதவும் அதேவேளையில், தொற்றுப் பொருள்களை அகற்றுவதிலும் கொண்டு செல்வதிலும் சுற்றியுள்ள உயிர்களுக்கு ஏற்படக்கூடிய அபாயங்களைத் தடுக்கவும் இந்த ஆய்வகம் உதவியாக இருக்கும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X