Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 பெப்ரவரி 15 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெனிம் காலத்தால் அழியாத ஆடையாகிவிட்டது. ஆனால் எங்கும் காணப்படும் இந்த துணியால் ஆன ஆடைகள் எப்போதும் புதுப் பொலிவுடன் காணப்படுபவை. ஏற்கெனவே தன்வசம் பெரும் தொகை தெரிவுகளைக் கொண்டுள்ள ஒடெல் பார்த்தவுடன் கவரும் பல டெனிம் தெரிவுகளைத் தற்போது அறிமுகம் செய்துள்ளது. காலத்துக்கு ஏற்ற நவநாகரிக போக்குகளை அறிமுகம் செய்யும் ஒடெல்லின் உலகளாவிய பல பிரபல முத்திரைகளை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது.
லீவைஸ், பெபி ஜீன்ஸ் லண்டன், றேங்லர் அன்ட் லீ. பல்வேறு விதமான உலகப் புகழ் பெற்ற தரமான டெனிம் உற்பத்திகள் இதில் அடங்கியுள்ளன.
இந்தப் புத்தம் புதிய உற்பத்திகளை உள்ளடக்கிய நவநாகரிக தெரிவுகள் “டெனிம் அன்ட் கோ” என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளன. டெனிம் துணிகளுக்கே உரிய பல்வேறு விதமான துணி வகைகளில் இவை அமைந்துள்ளன.
சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் தெஸிரி கருணாரத்ன இது பற்றிக் குறிப்பிடுகையில் “காலத்தால் அழியாத டெனிம் மீதான மக்கள் விருப்பம் உலகளாவிய ரீதியில் அதற்கென தனி இடத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளது. எல்லா சந்தர்ப்பங்களுக்கும் ஒத்துப் போகக் கூடிய சிறப்பான இயல்பை அது கொண்டுள்ளது. எனவே பல்வேறு விதமான டெனிம் தெரிவுகளை அறிமுகம் செய்வதில் நாம் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம். வாடிக்கையாளர்கள் தமது டெனிம் விருப்புக்களை எமது காட்சியகங்கள் ஊடாக நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
13 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
58 minute ago