Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 22 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆடை உற்பத்தியாளரும் ஏற்றுமதியாளருமான ஒமெகா லைன், மேர்கன்டைல் பெண்கள் கரப்பந்தாட்ட சம்பியன்சிப் 2017 இன் A மற்றும் C பிரிவுகளில் சம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளது. மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் சம்மேளன உள்ளக மைதானத்தில் நடைபெற்றது.
போட்டிகளில் நாட்டின் முன்னணி வர்த்தக நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 100 பெண்கள் கரப்பந்தாட்ட அணிகள் பங்குபற்றியிருந்தன.
மேர்கன்டைல் பெண்கள் கரப்பந்தாட்ட சம்பியன்சிப் 2017 இன் A மற்றும் C பிரிவுகளில் சம்பியன் பட்டத்தை தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக ஒமெகா லைன் சுவீகரித்திருந்தமையினால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
A அணிக்கு பியுமி மஹேஷிலா தலைமை வகித்திருந்ததுடன், C அணிக்கு பிரபோதா திலகரட்ன தலைமை வகித்திருந்தார்.
A அணியில் மிகவும் பெறுமதி வாய்ந்த விளையாட்டு வீரருக்கான விருதை அணித்தலைவர் பியுமி மஹேஷிலா பெற்றுக்கொண்டதுடன், ‘Best Setter’ மற்றும் “Best Attacker” ஆகிய விருதுகளை திலினி மதுசங்கிகா மற்றும் சந்துனி கவிஷா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். C அணியில் மேற்படி விருதுகள் பிரபோதா திலகரட்ன, துலானி ஜயசிங்க மற்றும் பிரதீபா பீலிக்ஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். கடந்து ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளில் இந்த விளையாட்டு வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததுடன், இந்த பிரதான விருதுகளையும் வென்றிருந்தனர்.
அணிகள் வெற்றியீட்டிய விருதுகள் பற்றி, அணி முகாமையாளர் தம்மிக துஷார ஹேரத் தெரிவிக்கையில், “பெண்கள் கரப்பந்தாட்ட போட்டித்தொடரை தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் ஒமெகா லைன் அணிகள் வெற்றியீட்டியமை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்” எனக் குறிப்பிட்டார்.
“விளையாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கும் நிறுவனம் எனும் வகையில், எமது அணியினர் இந்த ஆண்டு பெண்கள் கரப்பந்தாட்ட போட்டித்தொடரிலும் சிறப்பாக செயலாற்றியிருந்தமைக் குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம். 2017ஆம் ஆண்டுக்கான சம்பியன்சிப் போட்டிகளை வெற்றியீட்டியமை எமது நிறுவனத்துக்கும் ஊழியர்களுக்கும் சிறந்த சாதனையாக அமைந்திருந்தது” என்றார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “ஒமெகா லைன் பெண்கள் கரப்பந்தாட்ட அணிகள் இந்தப் போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளமையினூடாக நிறுவனத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர். தமது ஓய்வு நேரங்களில் பயிற்சிகளை பெறுவதற்காக இவர்கள் அர்ப்பணித்திருந்தனர்” என்றார்.
ஓமெகா லைன் பெண்கள் கரப்பந்தாட்ட அணிகளின் பயிற்சியாளரான சன்ன ஜயசேகர மற்றும் புஷ்பா ரஞ்சனி பொதேஜு ஆகியோர் செயலாற்றியிருந்தனர்.
A அணியின் தலைவர் பியுமி மஹேஷிலா இந்த விசேட வெற்றி தொடர்பில் தெரிவிக்கையில், ஒமெகா லைன் பணிப்பாளர் மற்றும் முழு ஊழியர்களும் வழங்கியிருந்த உதவி, பங்களிப்பு, ஊக்குவிப்பு மற்றும் நல்லாசிகள் போன்றவற்றின் காரணமாக இரு அணிகளுக்கும் வெற்றியீட்ட முடிந்ததாக குறிப்பிட்டார்.
“ஒமெகா லைன் பெண்கள் கரப்பந்தாட்ட அணி சார்பாக, நான் எமது மனமார்ந்த நன்றிகளை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
26 minute ago
23 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
23 Jul 2025