Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
S.Sekar / 2022 மார்ச் 29 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓய்வூதியம் பெறுவோருக்கு, உயிரியல் மரபணுவியல் உறுதியளிப்பு முறைமையினூடாக ஆயுள் சான்றிதழ்களை வழங்குவதற்காக ஓய்வூதியத் திணைக்களத்துடன் செலான் வங்கி கைகோர்த்துள்ளது. ஓய்வூதியம் பெறுபவரின் நிலையை உறுதி செய்வதற்காக பயன்படுத்தப்படும் முக்கியத்துவம் வாய்ந்த ஆவணமாக இந்த ஆயுள் சான்றிதழ் காணப்படுகின்றது. இந்த இயந்திரத்தினூடாக ஓய்வூதியம் பெறுநரின் கைவிரல் ரேகை பயன்படுத்தப்பட்டு, ஆயுள் சான்றிதழ் வழங்கப்படும். அதனூடாக சகல ஓய்வூதியம் பெறுவோருக்கும் இந்த செயன்முறையை எளிமையானதாகவும், வினைத்திறனானதாகவும் இலகுவில் அணுகக்கூடியதாகவும் திகழச் செய்வதற்கு பங்களிப்பு வழங்கப்படும்.
கடந்த காலங்களில், சகல ஓய்வூதியம் பெறுவோரும், ஆண்டின் குறித்த காலப்பகுதியினுள் ஓய்வூதியம் பெறுநருக்கான ஆயுள் சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டியிருந்தது. 75 கிளைகளிலும் ஆயுள் சான்றிதழ்களை வழங்குவதற்கு நவீன தொழில்நுட்ப மேம்படுத்தல்களை மேற்கொள்வதற்கு பிந்திய தொழில்நுட்ப மேம்படுத்தல்களை செலான் வங்கி தற்போது ஏற்படுத்தியுள்ளது. நீண்ட வரிசைகளில் காத்திருப்பதற்கான தேவையை இந்த முறைமை இல்லாமல் செய்துள்ளதுடன், தற்போதைய தொற்றுப் பரவலுடனான சூழலில், சிரேஷ்ட பிரஜைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் பங்களிப்பு வழங்குகின்றது.
இந்தத் திட்டம் தொடர்பில் ஓய்வூதியத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ. ஜகத் டி டயஸ் கருத்துத் தெரிவிக்கையில், “ஓய்வூதியம் பெறுவோரின் நலன் குறித்து கவனம் செலுத்துவது எமது பொறுப்பாக அமைந்துள்ளது என்பதில் ஓய்வூதியத் திணைக்களத்தைச் சேர்ந்த நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். இவர்கள் நாட்டுக்கு சிறந்த சேவையை வழங்கியுள்ளனர். இதன் பெறுபேறாக, சகல செயன்முறைகளிலும் அவர்களின் சௌகரியத்தை உறுதி செய்வது எமது பொறுப்பாக அமைந்துள்ளது. ஆயுள் சான்றிதழை துரிதமாக பெற்றுக் கொள்வதில் இந்த வசதி உதவியாக அமைந்திருக்கும். இந்த செயன்முறையை எமக்கு மேம்படுத்துவதற்கு ஆதரவளிப்பதில் செலான் வங்கி எமக்கு உறுதுணையாக அமைந்திருந்தமைக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம்.” என்றார்.
செலான் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் சகல ஓய்வூதியம் பெறுவோருக்கும் ஆயுள் சான்றிதழை வழங்குவதற்காக உயிரியல் மரபணுவியல் உறுதிப்படுத்தும் முறைமையை அறிமுகம் செய்வதில் பங்களிப்பு வழங்குவதையிட்டு செலான் வங்கி பெருமை கொள்கின்றது. ஓய்வூதியம் பெறுவோரினால் வருடாந்தம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கண்டிப்பான ஆவணமாக இது அமைந்திருக்கும் நிலையில், இந்த சிக்கல்களில்லாத முறைமையின் அறிமுகத்தினூடாக அது பயனளிப்பதாக அமைந்திருக்கும் என்பதில் நாம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம். ஓய்வூதிய திணைக்களத்துடனான இந்தப் பங்காண்மையினூடாக, இந்த செயன்முறைக்கு பங்களிப்பு வழங்க எமக்கு வாய்ப்புக் கிடைத்திருந்ததுடன், ஆயுள் சான்றிதழை சமர்பிக்கும் சிக்கல்கள் நிறைந்த செயன்முறையை இல்லாமல் செய்ய முடிந்துள்ளது. அன்புடன் அரவணைக்கும் வங்கி எனும் வகையில், எமது வாடிக்கையாளர்களின் வாழ்க்கைக்கு வளமூட்டும் செயற்பாடுகளில் எப்போதும் நாம் கவனம் செலுத்துவதுடன், அவர்களின் நாளாந்த செயற்பாடுகளை எளிமைப்படுத்தும் தீர்வுகளை வழங்கி வாழ்வுக்கு வளமூட்டுகின்றோம். எமது ஓய்வூதியம் பெறுவோருக்காக இந்த புதிய செயன்முறையின் அனுகூலத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஓய்வூதியத் திணைக்களத்துடன் கைகோர்த்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.” என்றார்.
எமது சமூகத்தில் சிரேஷ்ட பிரஜைகள் ஆற்றும் பங்களிப்பு தொடர்பில் செலான் வங்கி உண்மையில் அதிகளவு மகிழ்ச்சியடைவதுடன், அவர்களின் நிதிச் சுதந்திரம் மற்றும் உறுதித் தன்மை ஆகியவற்றுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றது. ஓய்வூதியம் பெறுவோருக்காக வங்கியினால் பல சேமிப்புத் தீர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், சிரேஷ்ட பிரஜைகளுக்கான செலான் ஹரசார, நிதிச் சுதந்திரத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சேமிப்புக் கணக்காக அமைந்துள்ளது.
செலான் ஹரசார குடும்பத்தில் அங்கம் பெறுமாறு சகல சிரேஷ்ட பிரஜைகளையும் வரவேற்பதுடன், அதனூடாக தமது ஓய்வுக் காலத்தை நிதிச் சுதந்திரத்துடனும், மன நிம்மதியுடனும் சிறந்த அனுகூலங்கள் மற்றும் பிரத்தியேகமான சேவைகளை மகிழ்ச்சியாக அனுபவிக்கக்கூடியதாக இருக்குமெனவும் தெரிவித்துள்ளது. இந்த வசதி தொடர்பான மேலதிக தகவல்களை அருகாமையிலுள்ள செலான் வங்கிக் கிளையிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
38 minute ago
44 minute ago
53 minute ago