2025 ஜூலை 24, வியாழக்கிழமை

க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கான செயலமர்வை LB பினான்ஸ் முன்னெடுப்பு

Editorial   / 2017 ஒக்டோபர் 12 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாளைய தலைவர்களாக உருவாகவுள்ள இன்றைய சிறுவர்களின் கைகளிலேயே, தேசத்தின் வளமான எதிர்காலம் தங்கியுள்ளது என்பதை LB பினான்ஸ் குழுவினர் திடமாக நம்புகின்றனர். இதன் காரணமாகவே, LB பினான்ஸ் அதன் சமூக பொறுப்புணர்வு திட்டங்களில் கல்விக்கு ஆதரவு வழங்கும் சேவைகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இதற்கிணையாகவே, பொறுப்பு மிக்க கூட்டாண்மை நிறுவனம் என்ற ரீதியில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான சமூகத்துடன் கைகோர்த்து இலங்கையின் பின்தங்கிய பிரதேசங்களில் கல்வித்தரத்தை மேம்படுத்தும் முக்கிய நோக்கத்துடன் விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்கள் மீது கவனம் செலுத்தும் வகையில் ‘க.பொ.த சாதாரண தர பரீட்சை செயலமர்வு தொடர்’ எனும் CSR திட்டத்தை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் LB பினான்ஸ் நிறுவனம் அங்குரார்ப்பணம் செய்திருந்தது. இத்திட்டம் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை முறையே மொனராகலை, மாத்தளை, பொலன்னறுவை, அம்பாறை மற்றும் மகியங்கனை ஆகிய பிரதேசங்களில் O/L செயலமர்வுகளை இந்நிறுவனம் முன்னெடுத்துள்ளது.   சாதாரணதர செயலமர்வு தொடர்களை அறிமுகம் செய்யும் வகையில் இந்த வருடம் LB பினான்ஸ் நிறுவனம், மாணவர் சங்கத்தின் ஆதரவுடன் அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் பின்தங்கிய பிரதேசங்களைத் தெரிவு செய்துள்ளது. புவியியல் மற்றும் சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டு மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் அமைந்துள்ள காரணத்தினாலும், பாடசாலைக்கும், மாணவர்களுக்கும் வளமான எதிர்காலத்தை கட்டியெழுப்பும் நோக்கில் சிறந்த கல்வியை வழங்குவதற்கான ஆர்வத்தையும், அர்ப்பணிப்பையும் கொண்டுள்ள ஆசிரியர் குழுவினரும் காணப்படுவதன் காரணமாகவும் இப் பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. 

இந்த முயற்சி குறித்து தமது கருத்தை தெரிவித்த எல் பி பினான்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஜே.ஏ.எஸ்.சுமித் ஆதிஹெட்டி, ‘இந்த தேசிய மட்ட பரீட்சையை சிறந்த முறையில் முகம் கொடுப்பதில் எதிர்கொள்ளும் அடிப்படை சவால்களை நிவர்த்தி செய்வதற்காக மாணவர்கள் மற்றும் அவர்களது எதிர்கால தொழில் வாழ்க்கைக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குவதும், அவர்களது விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாடங்கள் தொடர்பான மென் திறன்களை மேம்படுத்தி, எதிர்காலத்துக்கானச் சிறந்த வாய்ப்பை வழங்குவதுமே இந்த செயலமர்வு தொடர்களின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளது” என்றார்.  

கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான சமூகத்தின் தலைவர் சின்தக்க அமரசிங்க இந்த செயலமர்வு குறித்து தெரிவித்ததாவது, “குறித்த பிரதேசங்களில் மாணவர்களிடமிருந்து கிடைத்த பெரும் வரவேற்பு மற்றும் ஆர்வம், இந்தச் செயற்றிட்டத்தின் பெறுமதியைச் சான்று பகர்வதாக அமைந்திருந்தது. தேசிய மட்ட தேர்வுக்கு முகங்கொடுக்கும் மாணவர்களுக்கு இந்தத் திட்டம் பெரும் உதவியாக அமைந்துள்ளதை கடந்த நான்கு வருடங்களாக நாம் அவதானித்து வருகிறோம். எமது எதிர்கால திட்டங்களின் போதும் LB பினான்ஸுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளோம்” என்றார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .