Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 நவம்பர் 02 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொம்பாங்க் மக்ஸ் லோயல்டி வெகுமதித் திட்டத்தை கொமர்ஷல் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இலங்கையில் முதற் தடவையாக கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் என்பவற்றை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகளை வழங்கும் முதலாவது திட்டமாக, இது அமைந்துள்ளது. பொருட்கள் கொள்வனவுகளின் போது, இந்த அட்டைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு, புள்ளிகள் வழங்கப்பட்டு வெகுமதி அளிக்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தை தளமாகக் கொண்டியங்கும் கொடுப்பனவுகள் மற்றும் தீர்வுகள் நிறுவனமான இன்பினியா சேர்விஸஸ் மற்றும் சொலூஷன்ஸ் நிறுவனத்தின் பங்குடைமையுடன், இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொமர்ஷல் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பொருட்களை கொள்வனவு செய்யும் போது அவற்றுக்கு புள்ளிகள் வழங்கப்படும். ஒவ்வொரு பாவனைக்கும் ஒரு ரூபாய் எனும் அடிப்படையில் இந்தப் புள்ளிகள் அமையும்.
பிளாட்டினம், கோல்ட் மற்றும் சில்வர் அட்டைகளை வைத்திருப்பவர்கள், அவற்றைப் பாவித்து கொள்வனவு செய்யும் ஒவ்வொரு 300 ரூபாய்க்கும் ஒரு புள்ளியைப் பெறுவர். ஏனைய டெபிட் மற்றும் கிெரடிட் அட்டைகளைப் பயன்படுத்துபவர்கள் ஒவ்வொரு 500 ரூபாய்க்கும் ஒரு புள்ளியைப் பெறுவர்.
2016 நவம்பர் 1ஆம் திகதி முதல், இந்தத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. டிெசம்பர் மாதம் முதல் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் வங்கி மீதிக்கூற்றோடு, அவர்கள் பெற்றுக் கொள்ளும் புள்ளி விவரங்களும் இணைக்கப்படும்.
வாடிக்கையாளர்களுக்கு தமது அட்டைகளைப் பாவிக்கக் கூடிய இடங்கள் பற்றிய பல வியக்கத்தக்க தெரிவுகளை முன்வைக்கவுள்ளதாக வங்கி அறிவித்துள்ளது. உலகின் முன்னணி விமான சேவைகள்,
ஹொட்டல்கள், ஈ-வர்த்தக நிலையங்கள் உட்பட இன்னும் பல வர்த்தக நிலையங்களும், இந்தத் திட்டத்தில் இணைக்கப்படவுள்ளன. கொமர்ஷல் வங்கி கிெரடிட் மற்றும் டெபிட் அட்டை பாவனையாளர்கள் பல்வேறு பிரத்தியேகமான கழிவுகளை ஏற்கெனவே அனுபவித்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .