2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

கேரகல ரஜ மஹா விகாரைக்கு சுவதேஷி ஒளியூட்டல்

Gavitha   / 2017 ஜனவரி 30 , பி.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுவதேஷி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் பிஎல்சி, வரலாற்று சிறப்பு மிக்க கேரகல ரஜ மஹா விகாரையின் “ஆலோக பூஜாவ” நிகழ்வுக்கு அனுசரணை வழங்கியிருந்தது. துருது முழுமதி தினத்தை முன்னிட்டு இந்த விசேட பூஜை நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இந்த நிகழ்வுக்கு “சுவதேஷி கொஹோம்ப ஆலோக பூஜா சத்காரய” என பெயரிடப்பட்டிருந்தது. 

கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள கேரகல ரஜ மஹா விகாரை, 13ஆம் நூற்றாண்டில் விஜயபாகு அரசரின் தம்பதெனிய ராஜதானி காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. “பத்மாவதி பிரிவெனை” கேரகல ரஜ மஹா விகாரையில் 15ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் 6ஆம் பராக்கிரமபாகு அரசரின் காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. 

சுவதேஷி நிறுவனத்தின் தலைமை அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான அமாரி விஜேவர்தன கருத்து தெரிவிக்கையில், “இலங்கையின் பாரம்பரிய மற்றும் சம்பிரதாய உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நூற்றுக்கு நூறு வீதம் இலங்கை நிறுவனம் என்ற வகையில் நாம் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை பொறுப்புணர்வுடன் செயலாற்றுவதன் மூலம் நடைமுறைப்படுத்தி வருகிறோம்” என்றார். 

“எமது பாரம்பரியம் குறித்து எமது எதிர்கால சந்ததியினருக்கும் உணர்த்துவது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். அத்துடன் யாத்திரிகர்கள் அனைவரினதும் நலன் கருதி நாம் இந்த ஒளியூட்டலை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X