2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கொழும்பு நகர ரயில் கட்டமைப்பு

Gavitha   / 2016 மே 17 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

'வேயாங்கொட முதல் பாணந்துறை வரையிலான 64 கிலோமீற்றர் தூரத்துக்கு அபிவிருத்தி செய்யப்படவுள்ள ரயில் பாதைத் திட்டத்துக்கு 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும்' என மதிப்பிடப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் காணப்படும் புகையிரத பாதை வலையமைப்பை நவீன மயப்படுத்துவதற்கு இந்தத் திட்டம் உதவியாக அமையும் என கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கொன்றில் பங்குபற்றி உரையாற்றும் போது வலு ஆலோசகர் கலாநிதி. திலக் சியம்பலாபிட்டிய இதைத் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து அரசாங்கம் கடன் உதவியை நாடவுள்ளது. இரண்டாம் கட்ட நிர்மாணப்பணிகளுக்கும் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலமாக கொழும்பு நகரப் பகுதியினுள் புகையிரதங்கள் இயங்கும் வேகம் மற்றும் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் என்பதுடன், தண்டவாளங்கள் மற்றும் சமிக்ஞைகள் ஆகியவற்றை மேம்படுத்துவதுடன், புகையிரத கட்டமைப்புக்கு மின்னூட்டும் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

தற்போது பிரதான பாதையில் சராசரி வேகமாக மணிக்கு 33 கிலோ மீற்றர் அமைந்துள்ளது. கரையோரப் பகுதியில் இந்த வேகம் மணிக்கு 28 கிலோமீற்றர்களாக அமைந்துள்ளது. புதிய அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் இந்த வேகம் மணிக்கு 100 கிலோமீற்றர்களாக தரமுயர்த்தப்படவுள்ளதுடன், விபத்துக்கள் நேராத வகையில் வேலிகள் இடப்படும் எனவும் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X