2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

கட்டுவான பகுதியில் புதிய 4G கோபுரம் நிறுவல்

S.Sekar   / 2021 ஓகஸ்ட் 16 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL, தனது புதிய 4G கோபுரத்தை, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின், பூகெந்தயாய, கட்டுவான பகுதியில் அண்மையில் நிறுவியிருந்தது. இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (TRCSL) “கிராமத்துக்கு தொடர்பாடல்” (கமட்ட சந்நிவேதனய) திட்டத்தின் அங்கமாக இந்த தொலைத் தொடர்பு கோபுரம் நிறுவப்பட்டுள்ளது. கிராமிய மக்கள் அவசியமான தொலைத் தொடர்பாடல் உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டிருப்பதை உறுதி செய்யும் வகையில் இது அமைந்துள்ளது.

இந்த புதிய கோபுரத்தை TRCSL இன் பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனநாயக்க மற்றும் SLT-MOBITEL இன் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி லலித் செனெவிரட்ன திறந்து வைத்ததுடன், இந்நிகழ்வில் TRCSL மற்றும் SLT-MOBITEL இன் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

2022 ஆம் ஆண்டின் நிறைவில் நாட்டின் சகல குடிமக்களுக்கும் 100% வலையமைப்பை எய்தும் நோக்கை அடிப்படையாகக் கொண்டு TRCSL செயலாற்றுவதுடன், இதில் SLT-MOBITEL பங்காளராக இயங்கி வருகின்றது. “கிராமத்துக்கு தொடர்பாடல்” (கமட்ட சந்நிவேதனய) திட்டத்தின் கீழ் மேலும் பகுதிகள் உள்வாங்கப்பட்டு, நாட்டின் பல மாவட்டங்களில் வலையமைப்பு விஸ்தரிப்புக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. TRCSL உடன் இணைந்து SLT-MOBITEL மேலும் பல உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளை முன்னெடுக்கும்.

டிஜிட்டல் எதிர்காலத்தை செயற்படுத்துவது SLT-MOBITEL இன் எதிர்பார்ப்பாக அமைந்திருப்பதுடன், அனைத்து இலங்கையர்களாலும் இதை அணுகக்கூடியதாக இருத்தல் வேண்டும். TRCSL உடன் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ள SLT-MOBITEL, தேசத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உட்கட்டமைப்புக்கு வலிமை சேர்த்து, குடிமக்களுக்கு வலுவூட்டி, டிஜிட்டல் புரட்சியினூடாக, சமூகத்தில் சுபீட்சத்தை தோற்றுவிப்பது இலக்காக அமைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .