Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஒக்டோபர் 05 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராணி சந்தன சவர்க்கார பாவனையாளர்களுக்கு கணபதி உருவம் பதித்தத் தங்க பென்டென்ட்களை இந்தத் தீபாவளி பண்டிகை காலப்பகுதியில் வெற்றியீட்டக்கூடிய வாய்ப்பை சுவதேஷி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் பிஎல்சி வழங்க முன்வந்துள்ளது. தமது வாடிக்கையாளர்களுக்கு, கணபதி தெய்வத்தின் ஆசிகளை பெற்றுக்கொடுக்க சுவதேஷி தீர்மானித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் ராணி சந்தன சவர்க்காரம் அல்லது நான்கு சவர்க்காரங்களை, ஒரு பொதியில் கொண்ட சிக்கன பொதி மேலுறையை தமது பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்கள் ஆகியவற்றுடன் ராணி சந்தன தங்க பென்டென்ட் சலுகை, தபால் பெட்டி இல. 4, கந்தானை எனும் முகவரிக்கு அனுப்பி இந்த போட்டியில் பங்கேற்க முடியும் என நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒக்டோபர் மாதத்தில் இந்த ஊக்குவிப்புத்திட்டம் முன்னெடுக்கப்படுவதுடன், வெற்றியாளர்கள் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மேற்கொள்ளப்படும் அதிர்ஷ்டசாலிகள் தெரிவைத்தொடர்ந்து அறிவிக்கப்படுவார்கள்.
ராணி சந்தன சவர்க்காரம் அழகிய பெண்களுடன் ஒன்றிணைந்துள்ளதுடன், சந்தனத்தின் நோயை குணப்படுத்தக்கூடிய குணவியல்புகளுக்காக, அது புகழ்பெற்றுத் திகழ்கிறது. 75 வருட காலமாக சந்தையில் காணப்படும் அசல் சந்தன சவர்க்காரமாக அவர்கள் அதன் தரத்தில் அதிகளவு நம்பிக்கை கொண்டுள்ளனர். ராணி சந்தன சவர்க்காரம், அழகுராணிகளின் தெரிவாக அமைந்துள்ளது.
1941ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ராணி வர்த்தக நாமம், சந்தன சோப் வகைகள் உற்பத்தில் அசைக்க முடியாத முன்னிலையை தன்னகத்தே கொண்டுள்ளது. உள்நாட்டில் மட்டுமல்லாமல், சர்வதேச ரீதியிலும் வரவேற்பைப் பெற்ற தயாரிப்பாக திகழ்கிறது. இன்று, தனது வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பிக்கையை வென்ற நாமமாக நிறுவனம் திகழ்வதுடன், ராணி சந்தன சவர்க்காரம், புகழ்பெற்ற 1ல் தர சந்தன அழகு வர்த்தக நாமமாக நாட்டில் திகழ்கிறது.
சுவதேஷி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் இலங்கையில் முதல் முறையாக மூலிகை சவர்க்கார உற்பத்தியில் ஈடுபட ஆரம்பித்த நிறுவனமாக சுவதேஷி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் நிறுவனம் திகழ்கிறது. கம்பனியின் புத்தாக்க மற்றும் ஆய்வு அடிப்படையிலான அபிவிருத்தி செயற்பாடுகள், சந்தையில் பல புதிய தயாரிப்புகளை முதன் முதலில் அறிமுகம் செய்ய ஏதுவாக அமைந்திருந்தன. இதில் ராணி சந்தன ஷவர் ஜெல் மற்றும் கொஹோம்ப ஹேர்பல் ஷவர் ஜெல் ஆகியவற்றை குறிப்பிட முடியும். சுவதேஷி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் பிஎல்சியினால் உற்பத்தி செய்யப்படும் ராணி சவர்க்காரம், சந்தன அழகு பராமரிப்பு தயாரிப்புகள் பிரிவில் சந்தையின் முன்னோடியாக திகழ்கிறது.
34 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago
2 hours ago