Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மார்ச் 27 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழில் வழிகாட்டலுக்கு, அறிவை மேம்படுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி, மாணவர்களுக்கு சேவையளிக்கும் முயற்சியாக, கண்டி, மாத்தறை ஆகிய இடங்களில் இரு தொழில் வழிகாட்டல் நிகழ்வுகளை அண்மையில் Fashion Bug வெற்றிகரமாக நடாத்தியுள்ளது.
ஒரு வர்த்தக நிறுவனம் என்ற வகையில், நிறுவனத்தின் பாராட்டத்தக்க சேவைகளை வெளிக்காண்பிக்கும் வகையில், நாடெங்கிலும் பாடசாலைகள் மத்தியில் பயன்களை வழங்கும் முகமாக, தனது கல்விசார் வர்த்தகச் சமூகப் பொறுப்புணர்வுத் தளமேடையின் கீழ், ‘Sisu Dirimaga’ பிரசாரத்தை Fashion Bug ஆரம்பித்து வைத்திருந்தது.
Fashion Bug நிறுவனத்தின் பணிப்பாளரும், Sisu Dirimaga செயற்திட்டத்தின் ஸ்தாபகருமான ஷாபீர் சுபியான், “ஒரு தனித்துவமான வர்த்தக சமூகப் பொறுப்புணர்வு அடையாளத்தை ஸ்தாபிப்பதில் நிறுவனத்தின் தெளிவான, ஒத்திசைவான, நீண்ட கால நோக்கங்களே இச்செயற்திட்டத்தின் வெற்றிக்கான அத்திவாரம்” என குறிப்பிட்டார்.
“Fashion Bug நிறுவனம் எப்போதும் ஒரு பொறுப்புள்ள வர்த்தக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்றது. அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நிலைபேற்றியல் கொண்ட நோக்கத்துக்கு எமது வாடிக்கையாளர்களும், பங்காளர்களாக மாறும் வகையில், எமது வர்த்தகச் சமூகப் பொறுப்புணர்வுச் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம்” என்று சுபியான் குறிப்பிட்டார்.
“இலங்கையின் பல பாகங்களிலும் முன்னெடுக்கப்பட்ட ஒவ்வொரு செயற்திட்டங்களிலும் பெருமளவான எண்ணிக்கையானோர் பங்குபற்றியுள்ளமை ஆடை அணிகலன் சில்லறை விற்பனையில் மாபெரும் இந்த நிறுவனத்தின் சாதனைகளுக்கு சான்றாக அமைந்துள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கண்டி வலயக் கல்விப் பணிமனையுடன் இணைந்து கண்டி தர்மராஜ கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது நிகழ்ச்சித்திட்டத்தில், பல்வேறு சமூகங்களையும் சார்ந்த 550 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் உளவியல் பீடத்தின் விரிவுரையாளரான அசங்க ஜெயரட்ணவினால் சிங்கள மொழி மூல மாணவர்களுக்கு இந்நிகழ்ச்சித்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாணவர்கள் தாங்கள் கால்பதிக்க விரும்புகின்ற சரியான தொழிற்துறையைத் தெரிவு செய்வதற்கு, மிகவும் தேவையான ஆதரவு, ஊக்குவிப்பு, வழிகாட்டல் ஆகியன இப்பிரத்தியேக செயலமர்வு மூலமாக அவர்களுக்கு வழங்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .