Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 23 , பி.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
Kia மோட்டர்ஸ் (லங்கா) நிறுவனம் இலங்கையில் அதன் விநியோகச் செயற்பாட்டை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையின் ஒரு அங்கமாகக் கண்டி நகரில் புதியக் காட்சி அறை ஒன்றைத்திறந்துள்ளது.
கட்டுகஸ்தொட்டை பாலத்தில் இருந்து சரியாக இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் இந்தப் புதிய காட்சியறை அமைந்துள்ளது. சர்வதேச தரத்துடன் கூடிய இந்தக் காட்சி அறை 264 கட்டுகஸ்தொட்டை வீதி கண்டி என்ற முகவரியில் அமைந்துள்ளது.
ஒடோலிங்க் நிறுவனம் இதன் விநியோக செயற்பாட்டை கொண்டிருக்கும். இந்த நிறுவனம் இந்தப் பிரதேசத்தில் 15 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்ட ஒரு மோட்டார் கார் விநியோக நிறுவனமாகும். பிரத்தியேகமான இந்தப் புதிய Kia காட்சியறை நகரின் மிகவும் சுறுசுறுப்பான மூலோபாய முக்கியத்துவம் மிக்க ஒரு அமைவிடத்தில் காணப்படுகின்றது. முக்கியமான Kia வாடிக்கையாளர் பிரிவுக்கு இந்த அமைவிடம் மிகவும் வசதியானதாக இருக்கும் என்று கம்பனி அறிவித்துள்ளது.
இந்தப் புதிய காட்சியறை சுமார் 50 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது விற்பனையாகும் பல்வேறு வகையான Kia வாகனங்கள் இங்கு விற்பனைக்கு வைக்கப்படும். Kia வர்த்தக முத்திரை மற்றும் அதன் வாடிக்கையாளர்களின் எதிர்ப்பார்ப்புக்களை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் நன்கு பயிற்றப்பட்ட ஊழியர்கள் இங்கு பணிக்கு அமர்த்தப்படுவர்.
இந்தக் காட்சி அறையின் சம்பிரதாயபூர்வ திறப்பு விழாவின் முக்கிய அம்சமாக 2018ஆம் ஆண்டின் மாதிரியான Kia சொரான்டோ விளையாட்டு ரக வாகனத்தின் அறிமுகம் அமைந்தது. இந்த வைபவத்தில் பேசிய Kia மோட்டர்ஸ் லங்கா நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் மஹேன் தம்பையா “இன்று இலங்கையில் மிகவும் பிரபலமான ஒரு வாகன வகையாக Kia அமைந்துள்ளது. எமது இருப்பை தொடர்ந்து விரிவாக்கும் வகையிலான முதலீடுகளை நாம் செய்துள்ளொம். இந்தத் தொழில்துறைக்கு இது மிகவும் சவால் மிக்க காலப்பகுதியாக இருந்த போதிலும் நாம் இதனைச் செய்துள்ளோம்” என்று கூறினார்.
25 minute ago
23 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
23 Jul 2025