2025 மே 12, திங்கட்கிழமை

கண்டியில் Wall Art காட்சியறை

S.Sekar   / 2022 மார்ச் 07 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

Wall Paper மற்றும் 3D Wall Panels நிறுவனமான Wall Art, தனது புதிய காட்சியறையை கண்டியில் அண்மையில் திறந்துள்ளது. இல. 2, பைரவகந்த ஒழுங்கை, அஸ்கிரிய, கண்டி எனும் முகவரியில் அமைந்துள்ள இந்தக் காட்சியறையில், ஜேர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பெருமளவு wallpaper தெரிவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Wall Art (Pvt) Ltd இன் முகாமைத்துவ பணிப்பாளர் கிஷானி களுஆரச்சி கருத்துத் தெரிவிக்கையில், “சுமார் 10 வருடங்களுக்கு முன்னதாக எமது பிரதான காட்சியறை கொழும்பில் நிறுவப்பட்டது. அக்காலப்பகுதியில் இலங்கையில் உடனுக்குடன் கிடைக்காத சுவர் அலங்காரத் தயாரிப்புகளை அறிமுகம் செய்வது எமது நோக்காக அமைந்திருந்தது. இந்தத் தயாரிப்புகள் தொடர்பில் சந்தையில் பெருமளவு விழிப்புணர்வு காணப்படாததுடன், இந்த தயாரிப்புகள் பற்றிய விழிப்புணர்வும், பாவனையும் அதிகரித்ததைத் தொடர்ந்து, இல்லங்கள், அலுவலகங்கள், காட்சியறைகள், ஹோட்டல்களில் பெருமளவு பயன்படுத்தப்படும் உள்ளக அலங்காரத் தெரிவுகளாக wallpaper மற்றும் 3D panel கள் அமைந்துள்ளன. கடந்த காலங்களில் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த பல வாடிக்கையாளர்களுக்கு நாம் சேவைகளை வழங்கியுள்ளதுடன், இப்பகுதியிலிருந்து இந்தத் தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்திருந்ததை அவதானிக்க முடிந்தது. கண்டியில் எமது புதிய காட்சியறை திறக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மத்திய மலை நாட்டைச் சேர்ந்த பரந்தளவு பாவனையாளர்களை சென்றடையக்கூடியதாக இருக்கும் என்பதுடன், அதிகரித்துச் செல்லும் கேள்வியை நிவர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும் என கருதுகின்றோம்.” என்றார்.

Wallpaper தெரிவுகள் பற்றி குறிப்பிடுகையில், “இலங்கை வாடிக்கையாளர்கள் புதிய அலங்காரங்கள் தொடர்பில் விருப்பம் கொண்டுள்ளனர். சிலர் பாரம்பரிய மற்றும் பூக்கள் போன்ற அலங்காரங்களில் நாட்டம் கொண்டுள்ளனர். உள்நாட்டவர்களின் தெரிவுகளுக்கமைவான அலங்காரங்களை தெரிவு செய்து எமது காட்சியறைகளில் விற்பனைக்காக காட்சிப்படுத்துகின்றோம்.” என்றார்.

Wallpaper களை பயன்படுத்துவதில் காணப்படும் பிரதான அனுகூலங்களில் ஒன்றாக 10 வருடங்களுக்கு மேலான ஆயுள் காலத்தை கொண்டுள்ளது. குறைந்த பராமரிப்பு, கழுவிப் பயன்படுத்தும் தன்மை, துரித மற்றும் இலகு பொருத்தும் தன்மை மற்றும் நிறம் மங்காத தன்மை போன்றன அடங்கியுள்ளன.

கொழும்பிலும் நாட்டின் வெவ்வெறு பகுதிகளிலும் ஹோட்டல்கள், உணவகங்கள், அலுவலகங்கள், வணிகப் பகுதிகள் மற்றும் வதிவிடங்கள் போன்றவற்றில் பல திட்டங்களை Wall Art பூர்த்தி செய்துள்ளது. திறன் படைத்த, முழு நேரம் பொருத்துகைகளில் ஈடுபடும் நிபுணர்களைக் கொண்ட ஒரே நிறுவனமாக திகழ்கின்றது. சில மணி நேரங்களில் அறை ஒன்றுக்கு முழுமையாக wallpaper செய்யக்கூடிய திறன் படைத்தவர்களாக இவர்கள் அமைந்துள்ளனர். மேலும், உயர் நியமங்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில், சகல ஒட்டும் பதார்த்தங்களும் ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X