Freelancer / 2025 ஒக்டோபர் 31 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கி, Prime Lands மற்றும் Prime Land Residencies நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தமானது, வீட்டு உரிமையாளர்கள், கொள்வனவாளர்கள் மற்றும் வங்கியை உள்ளடக்கிய முத்தரப்பு ஒப்பந்தத்தின் மூலம் கொமர்ஷல் வங்கியின் வீட்டுக் கடன் வசதிகளை வாடிக்கையாளர்கள் தடையின்றி அணுக உதவுகிறது. கொமர்ஷல் வங்கி, இலங்கையின் நில ஆதனத்துறையில் மிகவும் நம்பகமான நிறுவனத்தினால் அபிவிருத்தி செய்யப்பட்ட சொத்துக்களில் முதலீடு செய்ய விரும்பும் கடன்பெறுநர்களுக்கு ஒப்பிடமுடியாத நிபுணத்துவத்தையும் நெகிழ்வுத்தன்மையையும் வழங்குகிறது.
இந்த ஒப்பந்தம் தொடர்பாகக் கருத்து தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் தனிநபர் வங்கிப்பிரிவு பிரதிப் பொது முகாமையாளர் எஸ். கணேசன், “Prime Lands மற்றும் Prime Land Residencies உடனான இந்த ஒப்பந்தமானது, எமது வீட்டுக் கடன்பிரிவை விரிவுபடுத்துவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பை உருவாக்குகிறது, அதே நேரத்தில் அதிகமான இலங்கையர்கள் தமது வாழ்க்கை இலக்குகளில் ஒன்றை அடைய உதவுகிறது. கொமர்ஷல் வங்கியின் வலுவான வீட்டுக் கடன் வழங்கல், முன்னணி அபிவிருத்தியாளர் என்ற Prime குழுமத்தின் நற்பெயருடன் இணைந்து, வாடிக்கையாளர்கள் நிதி உறுதித்தன்மை மற்றும் கட்டுமானத்தின் தரம் ஆகிய இரண்டின் மூலமும் பயனடைவதை உறுதி செய்கிறது' என்று கூறினார்.
இலங்கையில் நில ஆதனத்துறையில் துறையில் முன்னணியில் திகழும் Prime குழுமமானது, நிலங்கள், வீடுகள், நிதி மற்றும் தொடர்மாடிக்குடியிருப்புகளுடன் தொடர்புடைய துணை நிறுவனங்களைக் கொண்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலான நம்பகத்தன்மையுடன் 300,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட இக்குழுமமானது, அதன் பசுமையான தொலைநோக்குப் பார்வையால் இயக்கப்படுவதாக பறைசாற்றும் நிலையில் 'பூமியில் ஒரு சிறந்த இடத்தை உருவாக்குவதற்கு உறுதிபூண்டுள்ளது', இது வாடிக்கையாளர்களின் கனவுகளை உயிர்ப்பிக்கும் குடியிருப்புகளை வழங்குவதற்கான அதன் ஆர்வத்தைத் தொடர்ந்து ஊக்குவிக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .