Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூன் 28 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை பிரதேசத்தில் தனது புதிய அங்கிகாரம் பெற்ற விநியோகஸ்த்தரை சென்ரல் இன்டஸ்ட்ரீஸ் பிஎல்சி அண்மையில் நியமித்திருந்தது. (யுனைட்டட் டிரேடர்ஸ், 121, அம்பாறை வீதி, சம்மாந்துறை) இந்தப் பிரதேசத்தில் காணப்படும் வியாபாரத் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில், இந்த விநியோகஸ்த்தரை நியமித்துள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய வியாபார நிலையத்தை நபர அபிவிருத்தி, நீர் விநியோக மற்றும் கழிகானியல் அமைச்சர் ரவுஃவ் ஹக்கீம் திறந்து வைத்திருந்தார்.
நாடு தழுவிய ரீதியில் அங்கிகாரம் பெற்ற விநியோகஸ்த்தர்களை நியமிக்கும் நடவடிக்கைகளை, சென்ரல் இன்டஸ்ட்ரீஸ் பிஎல்சி முன்னெடுத்த வண்ணமுள்ளது. அதனூடாக அதன் உன்னத தயாரிப்புகளான நஷனல் PVC நீர் குழாய்கள் மற்றும் ஏனைய தயாரிப்புகளை குறித்த பிரதேசங்களில் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்த வண்ணமுள்ளது.
நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு அதிகரித்துச் செல்லும் கேள்விகளை நிவர்த்தி செய்வதற்காக, கல்முனையில் நியமிக்கப்பட்டுள்ள புதிய விநியோகஸ்த்தர் நடவடிக்கைகளை முன்னெடுப்பார். வீடமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் தனிநபர்கள் மற்றும் நிர்மாண நிறுவனங்கள்/ ஒப்பந்தக்காரர்கள் நஷனல் PVC தயாரிப்புகள் மீது அதிகளவு நம்பிக்கை வைத்துள்ளனர். புதிய சென்ரல் இன்டஸ்ட்ரீஸ் பிஎல்சியின் அங்கிகாரம் பெற்ற விநியோகஸ்த்தரினால், நஷனல் PVC தயாரிப்புகள் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த ஹார்ட்வெயார் முகவர்கள், நிர்மாண கம்பனிகள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் வீடமைப்பாளர்களுககு விநியோகிக்கப்படும்.
கல்முனை பிரதேசத்துக்கான அங்கிகாரம் பெற்ற விநியோகஸ்த்தரை நியமிப்பது தொடர்பில், சென்ரல் இன்டஸ்ட்ரீஸ் பிஎல்சியின் பொது முகாமையாளர் மயூர ரூபதுங்க கருத்துத் தெரிவிக்கையில், நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான கேள்வி கடந்த காலங்களில் ஒப்பற்றளவில் அதிகரித்துள்ளது என்றார்.
ரூபதுங்க கருத்துத்தெரிவிக்கையில், “கல்முனை பகுதியில் தற்போது பெருமளவு நிர்மாணத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட வண்ணமுள்ளன. இந்தப் பிரதேசத்தில் நஷனல் PVC தயாரிப்புகளுக்கு பெருமளவு வாடிக்கையாளர்கள் காணப்படுகின்றனர். எனவே, நஷனல் PVC நீர் குழாய்கள் மற்றும் உதிர்பாகங்கள் தேவைகளை இந்த வாடிக்கையாளர்களுக்கு நிவர்த்தி செய்யும் பொறுப்பு எமக்காகும். எனவே, இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல்யம் பெற்ற விற்பனையாளரை எமது அங்கிகாரம் பெற்ற விநியோகஸ்த்தராக நாம் நியமித்துள்ளோம். தொடர்ச்சியாக நாடு முழுவதிலும் விநியோகஸ்த்தர்களை நியமிக்கும் செயன்முறைகளை நாம் தற்போது முன்னெடுத்த வண்ணமுள்ளோம்” என்றார்.
“புதிய விநியோகஸ்த்தர்களை நியமிப்பதன் ஒரே நோக்கம், எமது நஷனல் PVC குழாய்கள் மற்றும் ஏனைய சென்ரல் இன்டஸ்ட்ரீஸ் தயாரிப்புகள் போன்றவற்றில் உண்மையான வாடிக்கையாளர்களுக்கு சௌகரியத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாகும்” என்றார்.
34 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago
2 hours ago