Editorial / 2020 மே 12 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

4.5 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையின் பள்ளி செல்லும் குழந்தைகள் வீட்டில் இருக்கும் இச்சமயத்தில், புதிய மின் கற்றல் முறைமை முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த நேரத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, ஆரோக்கியம், உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பில் கற்பிக்க உதவுவதற்காக, கல்வி அமைச்சும் நெஸ்லே நிறுவனமும் ஒன்றிணைந்து நீண்ட காலமாக முன்னெடுத்து வருகின்ற Nestlé Healthy Kids நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மின் கற்றல் வடிவத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
பொதுவாக அரச பாடசாலைகளில் பாடநெறிக்கு புறம்பான ஒரு விசேட பாடமாக அமைச்சின் கல்வியாளர்களால் கற்பிக்கப்படும் இந்த நிகழ்ச்சித்திட்டம், பள்ளிக் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கையின் முதல் அதிகாரபூர்வ மின் கற்றல் 'ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்' (Poshanayai Suwadiviyai) சார்ந்த நிகழ்ச்சித்திட்டமாகும்.
மின்-கற்றல் நிகழ்ச்சித்திட்டமானது நவீன, இடைச்செயற்பாடுகள் கொண்ட கற்றல் பாணியைக் கொண்டுள்ளதுடன், இதில் பாடசாலை பாடவிதானத்துக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட உள்ளடக்கம் உள்ளது. இது ஆறு தொகுதிகள் கொண்டது, ஒவ்வொன்றின் முடிவிலும் ஒரு மதிப்பீடு உள்ளதுடன், மேலும், இது மும்மொழிகளிலும் கிடைக்கிறது. 60% க்கு மேல் மதிப்பெண் பெறுகின்றவர்கள் கல்வி அமைச்சிலிருந்து அதிகாரபூர்வ சான்றிதழைப் பெறுவார்கள்.
42 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago