2025 ஜூலை 23, புதன்கிழமை

களனி சக்தி சமூகப்பொறுப்புணர்வு திட்டம் 2020 வரை நீடிப்பு

Editorial   / 2017 நவம்பர் 29 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

களனி கேபல்ஸ் பிஎல்சி, தனது களனி சக்தி சமூகப்பொறுப்புணர்வுத் திட்டத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீடித்துள்ளதாக அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளர்களுக்காக இந்தத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இந்த நீடிப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையில், களனி கேபல்ஸ் பிஎல்சியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹிந்த சரணபால மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் உப வேந்தர் பேராசிரியர். ஆர்.விக்னேஷ்வரன் ஆகியோர் கைச்சாத்திட்டனர். 

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் ஒரு வருட காலத்துக்கானப் பரிபூரண நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளதுடன், பாடசாலை கல்வியை பூர்த்திச் செய்தவர்கள் மற்றும் ஆரம்பநிலையில் காணப்படுவோருக்கு தமது திறன்களை கட்டியெழுப்பிக்கொள்ள வழிகோலுவதாக அமைந்துள்ளது. உள்ளக மற்றும் தொழிற்துறை இலத்திரனியல் வயரிங் பதிப்பில் ஆழமான அறிவை பெற்றுக்கொடுப்பதாக அமைந்துள்ளது. 

2014இல் களனி சக்தி நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. களனி கேபல்ஸ் பிஎல்சியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹிந்த சரணபாலவின் ஆசிகளுடன், களனி சவிய மற்றும் களனி சக்தி நிகழ்ச்சிகளுக்கான ஒழுங்கிணைப்பாளர் ஜயந்த விஜேசிங்க மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் வசந்தி அரசரட்னம் ஆகியோரால் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 

2014இல் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை களனி கேபல்ஸ் பிஎல்சி மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் வசந்தி அரசரட்னம் ஆகியோரால் முதலில் கைச்சாத்திடப்பட்டிருந்தது. 

களனி கேபல்ஸ் பிஎல்சியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹிந்த சரணபால கருத்துத்தெரிவிக்கையில், “இலங்கை மக்களின் நிலையை மேம்படுத்தக்கூடிய சமூகப்பொறுப்புணர்வு நடவடிக்கைகளை பொறுப்புணர்வு வாய்ந்த நிறுவனம் வகையில் மேம்படுத்துகின்றமை குறித்து மிகவும் பெருமை கொள்கிறது” என்றார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், “வருடம் முழுவதிலும் களனி கேபிள்ஸ் பிஎல்சி வெவ்வேறு சமூகப்பொறுப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. களனி சவிய மற்றும் களனி சக்தி சமூகப்பொறுப்புணர்வு நிகழ்ச்சிகள் எமது நிறுவனத்துக்கு மிகவும் பிரத்தியேகமானதாக அமைந்துள்ளது. பாடசாலை கல்வியை பூர்த்தி செய்த மாணவர்கள் மற்றும் ஆரம்பநிலையிலுள்ளவர்களுக்கு களனி சவிய மற்றும் களனி சக்தி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று, இல்லங்கள் மற்றும் தொழில் நிலையங்களில் வயரிங் மற்றும் மின்கட்டமைப்பு நடவடிக்கைகளில் நிபுணத்துவ நிலையை எய்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மேலும், அவர்களுக்கு சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சான்றிதழ் வழங்கப்படுகிறது. இலங்கையின் நிறுவனம் எனும் வகையில், இந்த நடவடிக்கையில் கைகோர்த்துள்ளதையிட்டு நாம் பெருமையடைகிறோம்” என்றார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .