Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஜூன் 21 , பி.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
காகில்ஸ் வங்கி, தனது விற்பனையாளர் வலையமைப்பை மேலும் விஸ்தரிக்கும் வகையில் Cheapefares.com உடன் பங்காளராக இணைந்துள்ளது.
இந்தப் பங்குடமையின் மூலமாக வருடத்தில் 365 நாட்களும் மு.ப 8.00 மணி முதல் பி.ப 10.00 மணி வரை நாடளாவிய ரீதியிலுள்ள எந்தவொரு காகில்ஸ் ஃபூட் சிட்டி விற்பனை மய்யத்திலும் தமது டிக்கட் கொடுப்பனவுகளை வாடிக்கையாளர்கள் தற்போது மேற்கொள்ள முடியும்.
cheapefares.com மூலமாக ஹோட்டல் அல்லது விமானப் பிரயாணத்துக்கான முற்பதிவுகளை மேற்கொண்ட பின்னர், வாடிக்கையாளர்கள் தமக்கு வழங்கப்படுகின்ற மேற்கோள் குறியீட்டை பயன்படுத்தி, தாங்கள் விரும்புகின்ற காகில்ஸ் ஃபூட் சிட்டி விற்பனை மய்யத்தில் Cargills Cash வசதியினூடாகக் கொடுப்பனவை மேற்கொள்ள முடியும்.
கொடுப்பனவுகள் உடனடியாகப் பதிவு வைக்கப்படுவது, முற்பதிவுக்கு பின்னரான நடைமுறையில் மிகுந்த சௌகரியத்தை தோற்றுவிக்கும்.
வாடிக்கையாளர்களுக்கு விஸ்தரித்த அளவில் பல்வேறுபட்ட நிதியியல் சேவைகளை வழங்கும் வகையில் வங்கியின் டிஜிட்டல் முன்னெடுப்பை ஊக்குவிக்கும் ஒன்றாக இந்தச் சமீபத்தைய பங்குடமை அமைந்துள்ளதுடன், இலங்கையில் அனைவருக்கும் நிதியியல் சேவைகளை வழங்கும் வழிமுறைகளைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற தனது இலக்கையும் இதன் மூலமாக நிரூபித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
9 hours ago